திமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: ​தி​முக கூட்​ட​ணிக்கு வேறு கட்​சிகளும் வர வாய்ப்​புள்​ள​தாக​வும் வந்​தால் கலந்து பேசி முடிவு செய்​வோம் என்​றும் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். தமிழகத்​தில் வாக்​குச்​சாவடி தோறும் 30 சதவீதம் பேரை திமுக​வில் உறுப்​பின​ராக சேர்க்​கும் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ எனும் இயக்​கத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று சென்​னை​யில் தொடங்கி வைத்​தார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் ஓரணி​யில் தமிழ்​நாடு என்ற தலைப்​பில் பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெறுகிறது. ஜூலை 3 முதல் (நாளை) தமிழ்​நாடு முழு​வதும் வீடு​வீ​டாகச் சென்று மக்​களைச் சந்​திக்க இருக்​கிறோம்.

தமிழகத்​தின் மண், மொழி, மானம் காக்க, மக்​கள் அனை​வரை​யும் ஓரணி​யில் திரட்​டு​வது​தான் இதன் அடிப்​படை நோக்​க​மாகும். தமிழகத்​துக்கு தொடர்ந்து இழைக்​கப்​படும் அநீ​தி​களுக்கு எதி​ராக தமிழக மக்​கள் ஒருங்​கிணைந்து போராட வேண்​டும் என்பதற்கான முயற்​சி​தான் இது.

அனைத்​தி​லும் வளர்ந்த தமிழகத்​தை, மத்​திய அரசு பல்​வேறு வழிகளில் புறக்​கணிக்​கிறது. இதனை அரசி​யல் கட்​சிகள் மட்​டுமல்ல; ஒட்​டுமொத்த தமிழக மக்​களும் எதிர்க்க வேண்​டும். அதற்​காகத்​தான் ஆளுங்​கட்​சி, எதிர்க்​கட்சி என்று பாராமல் அனைத்து வீடு​களுக்​கும் சென்​று, மக்​கள் அனை​வரை​யும் சந்​திக்​கப் போகிறோம்.

அப்​போது, திமுக​வில் இணைய விரும்​புவோர் செயலி மற்​றும் படிவம் மூல​மும் தங்​களை இணைத்​துக் கொள்​ளலாம். மேலோட்​டமாக பார்த்​தால், திமுக உறுப்​பினர் சேர்க்​கை​யாக தெரிந்​தா​லும், உண்​மை​யான நோக்​கம் கட்சி எல்​லைகளைத் தாண்டி தமிழகத்​தின் நலனுக்​கானது.

தமிழகம் ஒன்​று​பட்டு நிற்​கும்​போது, எந்த சக்​தி​யாலும் நம்மை வீழ்த்த முடி​யாது என காட்​டி​யாக வேண்​டும். பாஜக​வின் அரசி​யல், பண்​பாட்டு படையெடுப்​பை, தமிழகம் மீதான பொருளா​தா​ரப் போரை எதிர்​கொள்ள நெஞ்​சுரம் உள்ள அரசி​யல் சக்தி தேவை. அதை உரு​வாக்​கத்​தான் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ பரப்​புரையை இயக்​க​மாகத் தொடங்கி இருக்​கிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். தொடர்ந்து செய்​தி​யாளர்​கள் கேள்வி​களுக்கு அவர் பதில் அளித்​தார்.

திரு​புவனம் விஷ​யத்​தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​திருந்​தால் பிரச்​சினை​யில்​லாம் இருந்​திருக்​கும். அதி​காரி​கள் தவறு செய்​தால் நடவடிக்கை எடுக்​கப்​படு​வ​தில்​லை? – என்ன தவறு செய்​தார்​கள், தகவல் தெரிந்​தவுடன் நடவடிக்கை எடுத்​து​விட்​டோம். கைது செய்​து​விட்​டோம். இன்​றைக்​குக்​கூட மேல​தி​காரி மீது நடவடிக்கை எடுத்​திருக்​கிறோம்.

உறுப்பினர் சேர்ப்பில் பழனி​சாமி வீட்​டுக்​கும் சென்று வலி​யுறுத்​து​வீர்​களா? – நிச்​சய​மாக சென்று விருப்​பம் உள்​ளவர்​களைச் சேர்க்​கப் போகிறோம். கட்​டாயப்​படுத்​திச் சேர்க்​கப் போவ​தில்​லை. ஒவ்​வொரு​வரிட​மும் பொறுப்பு ஒப்​படைத்​திருக்​கிறோம். அவர்​கள் சூழ்​நிலைக்​கேற்​ற​வாறு செல்​வார்​கள். நான் அந்​தப் பகு​தி​யில் இருந்​தால் பழனி​சாமி வீட்​டுக்கு நிச்​ச​யம் செல்​வேன்.

கூட்​ட​ணிக் கட்​சிகள் கூடு​தல் இடங்​களை கேட்​கத் தொடங்​கி​யுள்​ளார்​களே? – தேர்​தல் தேதி அறி​வித்த பிறகு நாங்​கள் உட்​கார்ந்து பேசுவோம். அதைச் சமாளித்​து​விடு​வோம்.

இந்​தக் கூட்​ட​ணி​யில் இன்​னும் கூடு​தல் கட்​சிகள் சேர வாய்ப்​பிருக்​கிற​தா? – வரு​வதற்​கான வாய்ப்​பிருக்​கிறது. அதை எப்​படி சேர்ப்​போம் என்று கலந்​துபேசி முடிவு செய்​வோம். 200 தொகு​தி​களில் வெல்​வோம் என்று சொல்​லி​யிருக்​கிறோம். அதைத் தாண்​டி​தான் வரும் என்று நினைக்​கிறேன்.

தமிழகத்​துக்கு தொடர்ந்து வரு​வேன் என மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறி​யுள்​ளாரே? – பிரதமரும், அமித் ஷாவும் அடிக்​கடி வரவேண்​டும். அவர்​கள் பேசுவது பொய் என்று மக்​களுக்​குத் தெரி​கிறது. அது எங்​களது தேர்​தல் நேரத்​தில் லாப​மாக அமை​யும். அதே​போன்​று, ஆளுநரும் கெடு​தல் செய்து கொண்​டிருக்​கிறார். அதனால் அவர்​களெல்​லாம் அடிக்​கடி வர வேண்​டும்​. அது​தான்​ என்​னுடைய ஆசை. இவ்​வாறு அவர்​ பதிலளித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.