சென்னை: விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு வரும் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது […]
