நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்

ருத்ரபிரயாக்: க​னமழை காரண​மாக உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் சோன்​பிர​யாக் அருகே நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால், கேதார்​நாத் யாத்​திரை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

உத்​தர​காண்ட் மாநிலத்​தில் நேற்று முன்​தினம் கனமழை பெய்​தது. இதனால் சோன்​பிர​யாக் அரு​கே​யுள்ள முங்​காட்​டியா என்ற இடத்​தில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதனால் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கேதார்​நாத் யாத்​திரையை மாவட்ட நிர்​வாகம் தற்​காலிக​மாக நிறுத்​தி​யுள்​ளது.

கவுரி​குந்த் பகு​தியி​லிருந்து திரும்​பிய சில பக்தர்கள் நிலச்​சரிவு ஏற்​பட்ட பகு​தி​யில் சிக்​கினர். அவர்​களை மாநில பேரிடர் மீட்பு குழு​வினர் பாது​காப்​பாக மீட்டு சோன்​பிர​யாக் அழைத்​து வந்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.