மத்திய அரசு வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைக்கப்பட்ட சாலைகள் எத்தனை? – தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: பிரதமரின் கிராம சாலைகள் திட்​டத்​தின் கீழ் மத்​திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்​கிய ரூ.5,886 கோடி​யில் இது​வரை அமைத்த சாலைகள் எத்​தனை என தமிழக அரசுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கேள்வி எழுப்பி உள்​ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரோடு மாவட்​டம் கோபிசெட்​டி​பாளை​யம் அருகே உள்ள அம்​மா​பாளை​யம் கிராம ஊராட்​சி, இரண்டு பக்​க​மும் பவானி ஆற்​றால் சூழப்​பட்​டுள்​ளது. வெள்​ளப் பெருக்கு காலங்​களில், பரிசல் போக்​கு​வரத்து தடைபடு​வ​தால், சுமார் 8 கி.மீ தொலை​வுக்​குச் சுற்​றிச் செல்ல வேண்​டி​யிருக்​கிறது.

குறிப்​பாக, அவசர மருத்​துவ சிகிச்​சைக்​குச் செல்​லும் நோயாளி​கள், குறித்த நேரத்​தில் மருத்​து​வ​மனை​களுக்​குச் செல்ல முடி​யாமல், பல உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இதனால் பவானி ஆற்​றைக் கடந்து செல்ல, உயர்​மட்​டப் பாலம் அமைத்​துத் தரக் கோரி, பல ஆண்​டு​களாக அம்​மா​பாளை​யம் கிராமப் பொது​மக்​கள், முதல்​வரிட​மும், அந்​தி​யூர் திமுக சட்​டப்​பேரவை உறுப்​பினரிட​மும் கோரிக்கை விடுத்​தும் நிறைவேற்​றப்​பட​வில்​லை.

தமிழகத்​தின் இன்​னும் பல மாவட்​டங்​களில் கிராம சாலைகள் அமைக்​கப்​பட​வில்​லை. ஆனால், தமிழகத்​தில் 100 சதவீத சாலைகள் அமைத்து விட்​டோம் என்று தமிழக அரசு பொய் கூறி வரு​கிறது.

மறைந்த முன்​னாள் பிரதமர் வாஜ்​பாய் கொண்​டு​வந்த பிரதமரின் கிராம சாலைகள் அமைக்​கும் திட்​டத்​துக்​காக மத்​திய அரசு தமிழகத்​துக்​கு, கடந்த ஆண்டு வரை வழங்​கிய நிதி ரூ.5,886 கோடி. அந்​தத் திட்​டத்​தை, ‘முதல்​வரின் கிராம சாலைகள் திட்​டம்’ என்று பெயர் மாற்றி அரசாணை வெளி​யிட்ட திமுக அரசு, இது​வரை இந்​தத் திட்​டத்​தின் கீழ் அமைத்த சாலைகள் எத்​தனை? மத்​திய அரசின் திட்​டங்​களுக்​குப் பெயர் மாற்​றி, ஸ்டிக்​கர் ஒட்​டு​வ​தில் மட்​டுமே குறி​யாக இருக்​கும் திமுக அரசு, அந்​தத் திட்​டங்​களை நிறைவேற்ற எந்த நடவடிக்​கை​யும் எடுப்​ப​தில்​லை.

2025-ம் ஆண்​டிலும், தமிழக கிராம மாணவ, மாண​வியர், கல்வி கற்​ப​தற்​காக, பரிசலில் பயணம் செய்ய வேண்​டி​யிருக்​கிறது என்​பது, வெறும் விளம்பர ஆட்சி நடத்​திக் கொண்​டிருக்​கும் தி​முக ஆட்​சி​யில் தமிழகம் எத்​தனை பின்​தங்​கி​யிருக்​கிறது என்​ப​தைக்​ காட்​டு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.