நேஷனல் ஹெரால்டு வழக்கு; ஏஜேஎல் நிறுவனத்தை காப்பாற்ற காங். முயற்சி – ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதம்

புதுடெல்லி: ‘‘அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்​தின் (ஏஜேஎல்) சொத்​துகளை விற்க நினைக்​க​வில்​லை. அதை காப்​பாற்​றவே காங்​கிரஸ் கட்சி முயற்​சித்​தது’’ என்று நீதி​மன்​றத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி​யின் வழக்​கறிஞர் வாதாடி​னார்.

அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்தை (ஏஜேஎல்) சுதந்​திரத்​துக்கு முன்பு ஜவகர்​லால் நேரு தொடங்​கி​னார். இதில் 5,000-க்​கும் மேற்​பட்ட சுதந்​திரப் போராட்ட வீரர்​கள் பங்​கு​தா​ரர்​களாக இருந்​தனர். இதன் சார்​பில் நேஷனல் ஹெரால்டு உள்​ளிட்ட சில பத்​திரி​கைகள் வெளி​யா​யின. நிதி நெருக்​கடி ஏற்​பட்​ட​தால், இந்​நிறு​வனத்​துக்கு காங்​கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்​தது. இதை திருப்​பிச் செலுத்​தாத நிலை​யில், இந்​நிறு​வனத்​தின் பங்​கு​கள் வெறும் ரூ.50 லட்​சத்​துக்கு யங் இந்​தியா நிறு​வனத்​துக்கு மாற்​றப்​பட்​டது. இந்​நிறு​வனத்​தின் 76 சதவீத பங்​கு​கள் காங்​கிரஸ் தலை​வர் சோனி​யா, ராகுல் ஆகியோருக்கு மாற்றப் பட்டன. ஆனால், ரூ.2,000 கோடி மதிப்​புள்ள ஏஜேஎல் நிறு​வனத்​தின் பங்​கு​களை மாற்​றிய​தில் முறை​கேடு நடந்​த​தாக சோனியா காந்​தி, ராகுல் காந்தி மீது குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி விஷால் காக்னி முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது ராகுல் காந்தி சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஆர்​.எஸ்​.சீமா வாதாடிய​தாவது: ஏஜேஎல் நிறு​வனத்தை நெருக்​கடி​யில் இருந்து காப்​பாற்​றவே காங்​கிரஸ் கட்சி முயற்​சித்​தது. அந்த நிறு​வனத்​தின் சொத்​துகளை விற்​ப​தற்கு அல்ல. ஏனெனில் ஏஜேஎல் நிறு​வனம் சுதந்​திர போராட்ட தியாகி​களின் பங்​களிப்​புடன் தொடங்​கப்​பட்​டது. ஏஜேஎல் கொள்​கை​தான் காங்​கிரஸ் கொள்​கை​யாக இருக்​கும் என்று நிறு​வனத்​தின் மெமரேண்​டம் ஆப் அசோசி​யேஷன் ஆவணத்​தில் கூறப்​பட்​டுள்​ளது.
நிறு​வனம் எந்த வரு​வா​யும் ஈட்​ட​வில்​லை. சுதந்​திரத்​துக்​குப் பிறகு ஏஜேஎல் நிறு​வனம் வர்த்தக நிறு​வன​மாக​வும் இல்​லை.

ஏஜேஎல் நிறு​வனத்தை காப்​பாற்ற வேண்​டும் என்​று​தான் காங்​கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்​சித்​தது. ஏஜேஎல் நிறு​வனத்​துக்கு காங்​கிரஸ் கட்சி கொடுத்த கடனை திருப்பி பெற வேண்​டும் என்​பது பிரச்​சினை இல்​லை. அந்த நிறு​வனத்தை மீட்​டெடுக்க வேண்​டும் என்​பது​தான் பிரச்​சினை. ஏஜேஎல் நிறு​வனத்​தின் சொத்​துகளை விற்று லாபம் பார்க்க வேண்​டும் என்​பது காங்​கிரஸ் கட்​சி​யின் நோக்​கமல்ல.இவ்​வாறு வழக்​கறிஞர் சீமா வா​தாடி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.