கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு 47 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலக்​கா​விரி, பாகமண்​டலா, மடிகேரி, மைசூரு உள்​ளிட்ட இடங்​களில் கனமழை பெய்து வரு​கிறது.

இதனால் காவிரி ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ள​தால் மண்​டியா மாவட்​டத்​தில் உள்ள கிருஷ்ண​ராஜ சாகர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. கடந்த 30-ம் தேதி கிருஷ்ண​ராஜ சாகர் அணை நிரம்​பியதை தொடர்ந்து மைசூரு, மண்​டியா மாவட்ட விவ​சாய பாசனத்​திற்காக நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது.

நேற்று மாலை 7 மணி நில​வரப்​படி, 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ண​ராஜ சாகர் அணை​யின் நீர்​மட்​டம் 123.70 அடி​யாக உள்​ளது. மைசூரு மாவட்​டம் எச்​.டி. கோட்​டை​யில் 19.52 டிஎம்சி கொள்​ளளவு கொண்ட கபினி அணை​யின் தற்போதைய கொள்​ளளவு17.05 டிஎம்சி ஆக‌ உள்​ளது. அணை​யில் இருந்து 10,000 கன அடி நீர்​திறந்​து​விடப்​பட்​டுள்​ளது.கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி ஆகிய இரு அணை​களில் இருந்​தும் தமிழகத்​துக்கு மொத்​த​மாக விநாடிக்கு 47 ஆயிரத்து 590 கன அடி நீர்​ திறந்​து​விடப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.