பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது: பிரேசிலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். முன்​ன​தாக, விமான நிலையத்தில் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்டு மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

பிரிக்ஸ் கூட்​டமைப்பு 2009-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்​ப​தற்​காக அங்கு சென்​றுள்ள பிரதமர் மோடிக்கு, ரியோ டி ஜெனிரோ விமான நிலை​யத்​தில் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்​டு, உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

உச்சி மாநாட்​டின் முதல் நாளான நேற்று ‘சர்​வ​தேச அமை​தி, பாது​காப்​பு, சீர்​திருத்​தம், நிர்​வாகம்’ குறித்த சிறப்பு கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். பிரேசில் அதிபர் லூலா டா சில்வா மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மோடியை ஆரத்தழுவி வரவேற்றனர். மாநாட்டின் 2-ம் நாளான இன்று சர்​வ​தேச சுற்​றுச்​சூழல், சுகா​தா​ரம் குறித்த சிறப்பு கூட்​டம் நடை​பெறுகிறது. இதி​லும் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார். பிரிக்ஸ் மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்​க​வில்​லை. அவருக்கு பதிலாக, சீன பிரதமர் லி கியாங் பங்​கேற்​றுள்​ளார். ரஷ்ய அதிபர் புதின் காணொலி வாயி​லாக கலந்து கொள்​கிறார். மாநாட்​டில் பல்​வேறு நாடு​களின் தலை​வர்​களு​டன் பிரதமர் மோடி விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு: உலகின் பல்​வேறு நாடு​கள், குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள் மீது அமெரிக்க அரசு அதிக வரி​களை விதித்​துள்​ளது. இதுபற்றி பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் விரி​வாக விவா​திக்​கப்​பட உள்ளது. பிரிக்ஸ் கூட்​டமைப்பு சார்​பில் புதிய கரன்​சியை அறி​முகம் செய்யவேண்​டும் என்று கடந்த 2023-ல் பிரேசில் அதிபர் யோசனை தெரி​வித்​தார். இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்​டனம் தெரி​வித்​தார். ‘‘புதிய கரன்​சியை அறி​முகம் செய்​தால், பிரிக்ஸ் நாடு​கள் மீது 100 சதவீதம் வரி விதிப்​பேன்’’ என்று எச்​சரி​த்தார். இந்த விவ​காரம் குறித்​தும் பிரிக்ஸ் மாநாட்​டில் விவா​திக்​கப்​படும் என்று தெரி​கிறது.

பிரிக்ஸ் மாநாட்டை முடித்​துக்​கொண்​டு, பிரேசில் தலைநகர் பிரேசிலி​யா​வுக்கு பிரதமர் மோடி செல்​கிறார். அங்கு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்​வாவை சந்​திக்​கிறார். இந்த சந்​திப்​பின்​போது பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாக உள்ளன.

ஆகாஷ் ஏவு​கணை​கள்: பிரேசிலின் பாது​காப்​புக்​காக குறுகிய தூரம் பாயும் ஏவு​கணை​களை வாங்க அந்த நாடு முடிவு செய்​துள்​ளது. இதற்​காக பிரேசில் ராணுவ அதி​காரி​கள் கடந்த 2023-ல் சீனா, இந்​தி​யா​வில் முகாமிட்டு பல்​வேறு ஏவு​கணை​களை ஆய்வு செய்​தனர். வேறு சில நாடு​களின் ஏவு​கணை​களை​யும் பிரேசில் ஆய்வு செய்​தது. இறு​தி​யில், இந்​தி​யா​வின் ஆகாஷ் ஏவு​கணை​களை வாங்க பிரேசில் முடிவு செய்​தது. அதற்​கான ஒப்​பந்​தம் தற்​போது கையெழுத்​தாகும் என்று தெரி​கிறது.

பிரான்​ஸின் ஸ்கார்​பீன் ரக நீர் ​மூழ்கி கப்​பல்​களை இந்​திய, பிரேசில்கடற்​படைகள் பயன்​படுத்தி வரு​கின்​றன. பிரேசிலிடம் உள்ள இந்த வகை நீர்​மூழ்கி கப்​பல்​களை பராமரிப்​பது தொடர்​பாக​வும் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து இந்​தி​யா​வுக்​கான பிரேசில் தூதர் கென்​னத் பெலிக்ஸ் கூறிய​போது, ‘‘டெல்​லி​யில் கடந்த 2023-ல் ஜி-20 உச்சி மாநாடு நடந்​த​போது, பிரதமர் மோடி​யும், பிரேசில் அதிபர் லூலா டா சில்​வா​வும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதன்​படி இரு நாட்டு வர்த்தக உறவு வலு​வடைந்து வரு​கிறது. தற்போது, பாதுகாப்பு, வர்த்​தகம்​ தொடர்​பாக பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும்​’’ என்றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.