டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது | Automobile Tamilan

இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 1 லட்சம் விற்பனை இலக்கை கடந்ததை முன்னிட்டு சிறப்பு பிரெஸ்டீஜ் ஆக்செரீஸ் பேக்கேஜை டீலர்கள் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது.

ஜூலை 2025 முதல் கிடைக்க உள்ள இந்த Prestige Package-ல் 10 பொருட்கள் கிடைக்கும்.

  • SS இன்சர்ட் உடன் டோர் வைசர்

  • ஹூட் எம்ப்ளம்

  • ரியர் டோர் லிட் கார்னிஷ்

  • ஃபெண்டர் கார்னிஷ்

  • பாடி கிளாடிங்

  • முன்புற பம்பர் கார்னிஷ்

  • ஹெட் லேம்ப் கார்னிஷ்

  • பின்புற பம்பர் கார்னிஷ்

  • ரியர் லேம்ப் கார்னிஷ் க்ரோம்

  • பேக் டோர் கார்னிஷ்

ஹைரைடர் காரில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 103hp மற்றும் 136.8Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2WD மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் இரண்டும் கிடைக்கின்றன, அதே நேரத்தில் 4WD மாடலில் ஆட்டோமேட்டிக் மட்டும் உள்ளது. 12V ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டரின் உதவியுடன் மைல்டு ஹைபிரிட் பெற்ற இந்த எஞ்சின் கொண்ட மாடல் 21.12kpl வரை மைலேஜ் வெளிப்படுத்துகின்றது.

அடுத்து, 1.5 லிட்டர் TNGA Atkinson ஹைபிரிட் எஞ்சின் அதிகபட்சமாக  92hp, 122Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் கூடுதலாக உள்ள பேட்டரி இணைந்து ஒட்டுமொத்தமாக  116hp, 141Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இ-சிவிடி கியர்பாக்ஸ் பெற்று இந்த எஞ்சின் கொண்ட மாடல் 27.7kpl வரை மைலேஜ் வெளிப்படுத்துகின்றது.

Hyryderக்கு 3 ஆண்டுகள் அல்லது 100,000 கிமீ உத்திரவாதம் வழங்கப்படுகிறது. இதை 5 ஆண்டுகள் அல்லது 220,000 கிமீ வரை நீட்டிக்கலாம். மேலும், ஹைப்ரிட் மாடலில் உள்ள பேட்டரிக்கு 8 ஆண்டுகள்/160,000 கிமீ உத்திரவாதமும் அளிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு அறிமுகமான டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் தற்போது 1 லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. இது இந்தியாவில் டொயோட்டா ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கான நம்பிக்கையை காட்டுகிறது என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.