2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள் | Automobile Tamilan

இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனையில் நாட்டின் முன்னணி மாருதி சுசூகி நிறுவனம் விளங்குகின்ற நிலையில், விற்பனை எண்ணிக்கையில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி எண்ணிக்கை 15,786 ஆக பதிவு ஜூன் 2025 மாதந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மாருதி டிசையர் உள்ளது.

Top 25 selling Cars in India – June 2025

முதல் 10 இடங்களில் 6 இடங்களில் மாருதி சுசூகி பெற்றுள்ள நிலையில் 25 இடங்களில் 9 இடங்களை பெற்றுள்ள நிலையில், இதற்கு அடுத்தப்படியாக உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தார், ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 700 உட்பட பொலிரோ, எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகிய 5 மாடல்கள் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் 4 மாடல்கள் உள்ளது. இந்த பட்டியலில் டாடா மோட்டார்ஸ், டொயோட்டா மற்றும் கியா போன்ற நிறுவனங்களின் மாடல்களும் உள்ளது.

முழு அட்டவனை பட்டியலில் எண்ணிக்கை மற்றும் மாடல்கள் உள்ளன.

 

S.No மாடல் ஜூன் 2025 YoY வளர்ச்சி
1 ஹூண்டாய் க்ரெட்டா 15,786 –3%
2 மாருதி சுசூகி டிசையர் 15,484 +15%
3 மாருதி சுசூகி பிரெஸ்ஸா 14,507 +10%
4 மாருதி சுசூகி எர்டிகா 14,151 –11%
5 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 13,275 –19%
6 மாருதி சுசூகி வேகன் ஆர் 12,930 –6%
7 மஹிந்திரா ஸ்கார்பியோ 12,740 +4%
8 டாடா நெக்ஸான் 11,602 –4%
9 டாடா பன்ச் 10,446 –43%
10 மாருதி சுசூகி ஃப்ரான்க்ஸ் 9,815 +1%
11 மஹிந்திரா தார் 9,542 +77%
12 மாருதி சுசூகி ஈக்கோ 9,340 –13%
13 மாருதி சுசூகி பாலேனோ 8,966 –40%
14 டொயோட்டா இன்னோவா 8,802 –6%
15 கியா காரன்ஸ் 7,921 +54%
16 மஹிந்திரா பொலிரோ 7,478 +2%
17 டொயோட்டா ஹை்ரைடர் 7,462 +75%
18 மஹிந்திரா XUV 3XO 7,089 –17%
19 ஹூண்டாய் வெனியூ 6,858 –31%
20 மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா 6,828 –29%
21 கியா சொனெட் 6,658 –32%
22 மஹிந்திரா XUV700 6,198 +5%
23 டாடா டியாகோ 6,032 +17%
24 ஹூண்டாய் எக்ஸ்டர் 5,873 –15%
25 ஹூண்டாய் ஆரா 5,413 +26%

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.