6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

2025 Toyota Glanza Gets Six Airbagsபலேனோ ரீபேட்ஜிங் கிளான்ஸா ஹேட்ச்பேக்கில் 6 ஏர்பேக்குகளை அடிப்படையாக சேர்க்கப்பட்டு ரூ.6.90 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம்  எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பிரெஸ்டீஜ் எடிசனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

6 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ள நிலையில் இதனை கொண்டாடும் வகையில் பிரெஸ்டீஜ் எடிசன் என்ற பெயரில் டீலர் அளவிலான கூடுதலான ஆக்செரீஸ் வழங்கப்படுகின்றது.

Toyota Glanza Prestige Package

  • பிரீமியம் கதவு விசர்கள்
  • குரோம் மற்றும் கருப்பு நிற கார்னிஷ் கூடிய உடல் பக்க மோல்டிங்
  • பின்புற விளக்கு கார்னிஷ்
  • ORVMகள் மற்றும் ஃபெண்டர்களுக்கான குரோம் கார்னிஷ்
  • பின்புற ஸ்கிட் பிளேட்
  • ஒளிரும் கதவு சில்ஸ்
  • கீழ் கிரில் கார்னிஷ்

இந்த சிறப்பு ஆக்செரீஸ் கொண்ட எடிசன் ஜூலை 31, 2025 வரை மட்டுமே கிடைக்கும்.

கிளான்ஸாவில் 90 hp பவர் மற்றும் 113 NM டார்க் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்ற நிலையில் மைலேஜ் 22.35 km/l (MT), 22.94 km/l(AMT) வெளிப்படுத்துகின்றது.

கூடுதலாக 77hp பவர் மற்றும் 98.5 NM டார்க் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெட்ரோல் சிஎன்ஜி எஞ்சின் மைலேஜ் 30.61 km/kg ஆக உள்ளது.

9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD), 360-டிகிரி கேமரா மற்றும் 45+ இணைக்கப்பட்ட அம்சங்களுடன் டொயோட்டா ஐ-கனெக்ட் வசதிகளும் உள்ளது.

2025 Toyota Glanza price list

Variant Price
Glanza E MT Rs. 6,90,000
Glanza S MT Rs. 7,79,000
Glanza S AMT Rs. 8,34,000
Glanza G MT Rs. 8,82,000
Glanza G AMT Rs. 9,37,000
Glanza V MT Rs. 9,82,000
Glanza V AMT Rs. 9,99,900
Glanza S CNG MT Rs. 8,69,900
Glanza G CNG MT Rs. 9,72,900

கிளான்ஸ்வுக்கு 3 ஆண்டுகள் அல்லது 100,000 கிமீ உத்தரவாதம்,  5 ஆண்டுகள் அல்லது 220,000 கிமீ வரை நீட்டிக்கலாம். மேலும், டொயோட்டாவின் 60 நிமிட எக்ஸ்பிரஸ் பராமரிப்பு சேவை, 24 மணி நேர சாலையோர உதவி ஆகியவற்றை புதிய வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.


2025 Toyota Glanza2025 Toyota Glanza

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.