‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரண விவகாரம்: மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: ​திரு​மலா பால் நிறுவன மேலா​ளர் மர்ம மரணம் விவ​காரத்​தில் மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் காத்திருப்போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். மேலும், கொளத்​தூர் துணை ஆணை​யர் அன்​றாட பணி​களை மேற்​கொள்ள தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி (37).

திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர், முதல் தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்னை மாதவரம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பொன்​னி​யம்​மன்​மேட்​டில் உள்ள திரு​மலா பால் நிறு​வனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலா​ள​ராக பணி​யாற்றி வந்​தார்.

இந்​நிலை​யில், அண்​மை​யில் திரு​மலா பால் நிறு​வனம் அவர்​களது நிறுவன வரவு- செலவு கணக்​கு​களை சரி​பார்த்து தணிக்கை செய்​துள்​ளது. அப்​போது, ரூ.40 கோடி முறை​கேடு நடந்​திருப்​பது தெரிய​வந்​தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்​த​தாக​வும், அந்த பணத்தை அவரது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பரின் வங்கி கணக்​குக்கு மாற்றி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக​வும் குற்​றம் ​சாட்டப்​பட்​டது.

இதுதொடர்​பாக அந்​நிறு​வனம் சார்​பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் நவீனை நேரில் வரும்​படி கூறி போனில் அழைத்து விசாரித்ததாகவும், அப்​போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடு​கிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டாம்’ என போலீஸாரிடம் நவீன் கேட்​டுக் கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. இதுத​விர மேலும் சிலர் நெருக்​கடி கொடுத்​த​தாக​வும் தெரி​கிறது.

இந்​நிலை​யில், கடந்த புதன்​கிழமை இரவு அவர் வீட்​டருகே உள்ள குடிசை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் நவீன் சடலமாக கிடந்​தார். தகவல் அறிந்து வந்த புழல் போலீ​ஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். போலீஸ் விசா​ரணைக்கு பயந்து நவீன் தற்​கொலை செய்து கொண்​டாரா அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்​கில் தொங்க விட்​டனரா என்ற கோணத்​தில் போலீ​ஸார் விசா​ரணையை தொடங்​கினர்.

விசா​ரணை தொடங்​க​வில்லை: இதற்​கிடை​யில், ‘நவீன் மீது கொளத்​தூர் துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் நிறு​வனம் அளித்த புகா​ரானது விசா​ரணைக்​காக புழல் உதவி ஆணை​யருக்கு அனுப்​பப்​பட்​டு, அவர் மூல​மாக மாதவரம் காவல் நிலைய குற்​றப்​பிரிவு ஆய்​வாளர் விஜய​பாஸ்​கருக்கு அனுப்​பப்​பட்​டிருந்​தது. இதில் விசா​ரணை தொடங்​கப்​பட​வில்​லை. அவரை காவல் நிலை​யம் அழைத்து விசா​ரிக்​க​வும் இல்​லை. மேலும், கடைசி​யாக நவீன் அவரது சகோ​தரி, அவர் பணி செய்த பால் நிறு​வனத்​துக்​கும் மின்​னஞ்​சல் அனுப்பி இருந்​தார். அதில், காவல்​துறையை பற்றி எது​வும் குற்​றம்​சாட்​ட​வில்​லை’ என காவல் ஆணை​யர் தரப்​பில் விளக்​கம் அளிக்​கப்​பட்​டது.

காவல் இணை ஆணையர்… இந்​நிலை​யில், நவீன் மரணம் தொடர்​பாக சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணை​யர் திஷா மித்​தல் விசா​ரணையை தொடங்கி உள்​ளார். முதல்​கட்​ட​மாக மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் விஜய​பாஸ்​கர் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். அதே​போல் கொளத்​தூர் துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு வரவழைத்து போலீஸ் அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

மேலும், விசா​ரணை முடி​யும்​வரை அவருக்​கான துணை ஆணை​யர் பணி​கள் எதை​யும் கவனிக்க கூடாது என தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. தின​மும் அவர் காவல் ஆணையர் அலுவலகம் வர வேண்​டும் எனவும் உத்​தரவிடப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.