சென்னை: தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணிய தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உலக மக்கள் தொகை தின நிகழ்ச்சியாக, இளம் பருவத்தினருக்கான விழிப்புணா்வு நல கையேடு மற்றும் குடும்ப நல விளக்க கையேடு வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன் கையேட்டினை வெளியிட்டார். தொடர்ந்து, விழிப்புணா்வு உறுதிமொழி பேரணியை அவா் தொடங்கி வைதததார். தொடா்ந்து, […]
