மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கு கணக்கீட்டு கருவியை மின்வாரியம் கொள்முதல் செய்து தர மின் ஊழியர் அமைப்பு வலியுறுத்தல்

சென்னை: மின் கணக்​கீட்டு பணி​யாளர்​களுக்​கு, கணக்​கீட்டு கரு​வியை மின்​வாரியமே கொள்​முதல் செய்து தர வேண்​டும் என, தமிழக மின்​ஊழியர் மத்​திய அமைப்பு வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இது குறித்​து, அந்த அமைப்பு வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் உள்ள 44 மின் வட்​டங்​களில், ஒவ்​வொரு மின் வட்​டத்​துக்​கும் 10 பிரிவு அலு​வல​கங்​களை தேர்வு செய்​து, அதில் பணிபுரி​யும் கணக்​கீட்​டாளர்​கள் தங்​களின் ஆன்ட்​ராய்டு செல்​போன்​களை பயன்படுத்தி மின்​வாரி​யத்​தின் செயலியை பதி​விறக்​கம் செய்து கணக்​கீட்டு பணியை செய்ய மின்​வாரிய தலைமை உத்​தரவு பிறப்​பித்​தது.

பிரிவு அலு​வலர்​களின் நிர்​பந்​தத்​தால், தமிழகம் முழு​வதும் உள்ள மின்​வட்ட கிளை​களில் பணிபுரி​யும் கணக்​கீட்​டாளர்​கள், கணக்கீட்டு ஆய்​வாளர்​கள் தற்​போது வரை தங்​களின் செல்​போனை பயன்​படுத்தி செயலி மூலம் கணக்​கீட்டு பணியை செய்து வரு​கின்​றனர். இந்த திட்​டத்தை செயல்​படுத்​து​வ​தில் உள்ள நடை​முறை சிக்​கல்​களை தீர்க்க, 5 முறை நிர்​வாகத்​துடன் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

அதில் எங்​களு​டைய கோரிக்​கை​களில் மிக முக்​கிய​மானவை​யாக உள்​ளவற்றை வாரிய நிர்​வாகம் இது​வரை நிவர்த்தி செய்யவி்ல்லை. மின்​வாரி​யம் புதிய மொபைல் வாங்க ரூ. 10 ஆயிரம் மட்​டும் கணக்​கீட்​டாளர்​களிடம் தரு​கிறது. அதற்​குப் பதிலாக, மின்​வாரியமே மொபைல் போன் வாங்​கித் தரலாம். அல்​லது புதுச்​சேரி உள்​ளிட்ட மற்ற மாநிலங்​களில் உள்​ளது போல, இந்த கணக்​கீட்டு தொழில் நுட்​பம் மட்​டும் உள்ள கரு​வியை கொள்​முதல் செய்து வழங்க வேண்​டும்.

மொபைல் அல்​லது கணக்​கீட்டு கரு​வியை மின்​வாரி​யம் கொள்​முதல் செய்து கொடுத்​தால் மட்​டுமே, அதில் பழுது ஏற்​பட்​டால் அதை சரிசெய்து கொடுக்க மின்​வாரி​யம் பொறுப்பு ஏற்க முடி​யும் இல்​லை​யெனில், பழுதை சரிசெய்ய உரிய கணக்​கீட்​டாளர் பொறுப்​பேற்க வேண்​டிய நிலை ஏற்​படும். கணக்​கீட்​டாள​ருக்கு மொபைல் வாங்க நேரடி​யாக பணம் கொடுக்​காமல், மின்​வாரியமே மொத்​த​மாக கொள்​முதல் செய்​தால், குறைந்த விலை​யில் கூடு​தல் தரத்​தோடும்.

கூடு​தல் பாது​காப்பு உத்​தர​வாத காலத்​தை​யும் பெற​முடி​யும். அந்​தந்த பகு​தி​யில் சிறப்​பாக நெட்​ஒர்க் கிடைக்​கும் சிம்​கார்​டு​களை பிரிவு அலு​வல​கங்​கள் மூல​மாக கொள்​முதல் செய்து கணக்​கீட்​டாள​ருக்கு வழங்க உரிய உத்​தரவு வழங்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.