கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது. இதையடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்​கைகளை அந்த மாநில அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. கேரள மாநிலத்​தில் ஆண்​டு​தோறும் கோழிக்​கோடு, பாலக்​காடு, மலப்​புரம் உள்​ளிட்ட இடங்​களில் தொடர்ச்​சி​யாக நிபா வைரஸ் பாதிப்பு இருந்து வரு​கிறது.

இந்​நிலை​யில் பாலக்​காடு மாவட்​டம் மன்​னார்​காடு அருகே குமரமபுத்​தூர் பகு​தியை சேர்ந்த 57 வயது நபர் ஒரு​வர் கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்​டிருந்​தார். இதற்​காக அப்​பகு​தி​யில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்​சல் குண​மாக​வில்​லை.

இதையடுத்து அவர், மலப்​புரம் மாவட்​டம் பெரிந்​தல்​மன்னா அருகே உள்ள ஒரு தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. அந்த மருத்​து​வ​மனை​யில் அவரது உடல்​நிலை மிக​வும் மோச​மானதையொட்டி மஞ்​சேரி​யில் உள்ள அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அவர் மாற்​றப்​பட்​டார்.

இந்​நிலை​யில் நேற்​று​முன்​தினம் மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது உடல் திரவ மாதிரி​களை சேகரித்து பரிசோ​தித்​த​தில் அவர் நிபா வைரஸ் பாதித்து இறந்​தது தெரிய​வந்​தது. இதனால் கேரளா​வில் நிபா வைரஸ் பாதித்து உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது. சில நாட்​களுக்கு முன்பு நிபா வைரஸால் பாதிக்​கப்​பட்ட மலப்புரத்தைச் சேர்ந்த நபர் ஒரு​வர் உயி​ரிழந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​நிலை​யில் மஞ்​சேரி அரசு மருத்​து​வ​மனையி​லிருந்து இறந்​தவரின் உடல் திரவ மாதிரி​கள் சேகரிக்​கப்​பட்டு மகா​ராஷ்டிர மாநிலம் புனே​வில் உள்ள வைராலஜி ஆய்​வகத்​துக்​கும் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளன. இத்​தகவலை கேரள மாநில சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்​துள்​ளார். இதையடுத்து மாநில சுகா​தா​ரத்​துறை நிபா பரவல் தடுப்பு நடவடிக்​கைகளை மலப்​புரம், பாலக்​காடு, பெரிந்​தல்​மன்​னா, கோழிக்​கோடு பகு​தி​களில் தீவிரப்​படுத்​தி​யுள்​ளது.

அதன்​படி முதற்​கட்​ட​மாக மாவட்ட சுகா​தா​ரத்​துறை​யால் நிபா வைரஸ் பாதித்து இறந்த நபரின் வீட்டை சுற்றி 3 கிலோமீட்​டர் சுற்றளவு தூரம் உள்ள பகு​தி​கள் கட்​டுப்​படுத்​தப்​பட்ட பகு​தி​களாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. இதனால் இங்​குள்ள பகு​திக்​குள் வெளியில் இருந்து நபர்​கள் வரவும், இங்​குள்ள மக்​கள் வெளியே செல்​ல​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் அந்த டலத்தில் இருப்​பவர்​கள் முகக்​கவசம், சமூக இடைவெளியை கடைப்​பிடிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

46 பேர்: நிபா வைரஸால் பாதித்து இறந்த 2-வது நபருடன் மொத்​தம் 46 பேர் தொடர்​பில் இருந்​தனர். இதையடுத்து இறந்த நபருடன் தொடர்​பில் இருந்த நபர்​களின் பட்​டியல் சேகரிக்​கப்​பட்டு வரு​கிறது. இதனிடையே நிபா வைரஸ் அறிகுறிகளு​டன் பெரிந்​தல்​மன்​னா​வில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் நேற்று ஒரு​வர் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.