இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இங்கிலாந்து முதல் மற்றும் மூன்றாம் டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று 2-1 என்ற கணக்கில் உள்ளனர். நேற்று (ஜூலை 14) முடிவடைந்த 3வது டெஸ்ட் போட்டியில் 193 என்ற எளிய டார்கெட்டை எட்ட முடியாமல் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதற்கு தொடக்கத்திலேயே தொடர்ந்து இந்திய அணி விக்கெட்களை இழந்ததுதான் காரணம் என கூறுகின்றனர். குறிப்பாக ஒன் டவுனில் களம் இறங்கும் கருண் நாயரை பலரும் கடுமையாக சாடி வருகின்றனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என கூறி வருகின்றனர். அவர் 6 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவர் வெறும் 131 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என கூறி வருகின்றனர். அவருக்கு பதிலாக சாய் சுதர்சனை அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தற்போது மூன்றாவது இடத்தில் யாரை களம் இறக்குவது என்று யோசனை இந்திய அணிக்கு இருக்கும். சாய் சுதர்சனை இறக்குவதா? அல்லது கருண் நாயருக்கு மற்றொரு வாய்ப்பு கொடுப்பதா? என்ற யோசனை இருக்கும். அதே சமயத்தில், துருவ் ஜூரலை கூட இறக்க அவர்கள் யோசித்து வருவார்கள். அவர் நல்ல பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார்.
ரிஷப் பண்டிற்கு கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவருக்கு குணமடைய நேரம் இருப்பதால், அடுத்த போட்டியில் அவர் விளையாடுவார் என நினைக்கிறேன். இந்திய அணி தோல்வியில் இருந்து மீட்டு வரும் என நினைக்கிறேன். முதல் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கம்பேக் கொடுத்தது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. எனவே நான்காவது போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன். இந்திய அணி இறுதி கட்டத்தில் சில ரன்களை விட்டுக்கொடுத்தது. பேட்டிங்கிலும் சொதப்பியது. இதனை சரி செய்யும் பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
மேலும் படிங்க: பஞ்சாப் கழட்டிவிடும் 4 வீரர்கள்! தட்டி தூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
மேலும் படிங்க: IND vs ENG: முக்கிய வீரர் தொடரில் இருந்து விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு?