ஏமனில் நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிமிஷாவை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி

புதுடெல்லி: கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார். பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை​யில் மெஹ்​திக்​கு,நிமிஷா மயக்க ஊசியை செலுத்​தி​னார். இதில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சூழலில் அவரை காப்​பாற்ற மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க உத்​தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா அமர்வு முன்பு வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மத்​திய அரசு சார்​பில் அட்​டர்னி ஜெனரல் வெங்​கடரமணி ஆஜராகி, ‘‘ஏமனில் நிமிஷா பிரி​யாவை காப்​பாற்ற மத்​திய அரசு சார்​பில் அனைத்து முயற்​சிகளும் மேற்​கொள்​ளப்​பட்​டன. நிமிஷா​வின் குடும்​பத்​தினர் ஏமனில் முகாமிட்டு உள்​ளனர். அவர்​களுக்கு மத்​திய அரசு உறு​துணை​யாக இருக்​கும்’’ என்றார்.

பின்னர் நீதிப​தி​கள் கூறும்​போது, “ஏமன் சிறை​யில் நிமிஷா பிரியா உள்​ளார். நாங்​கள் எந்த உத்​தரவு பிறப்​பித்​தா​லும் அதனால் எந்த பலனும் இல்​லை. நிமிஷாவுக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​படக்​கூ​டாது என்று விரும்​பு​கிறோம். வழக்​கின் அடுத்த விசா​ரணை ஜூலை 18-க்கு ஒத்​திவைக்​கப்​படு​கிறது” என்று தெரி​வித்​தனர்.

ஷரியா என்​றழைக்​கப்​படும் இஸ்​லாமிய சட்​டத்​தில் குரு​திப் பணம் என்​பது ஒரு வகை​யான நீதி​யாக கருதப்​படு​கிறது. எனவே, பிரியா குடும்​பத்​தினர் சார்​பில் உயி​ரிழந்த மெஹ்தி குடும்​பத்​தினருக்கு ரூ.8.6 கோடியை வழங்க முன்​வந்​துள்​ளனர்.
அதை மெஹ்தி குடும்​பத்​தினர்​ ஏற்பார்களா என்​பதற்​கு இதுவரை விடை கிடைக்​கவில்​லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.