சத்தீஸ்கரில் 35 ஆண்டுகள் வசித்த வங்கதேச தம்பதி கைது

புதுடெல்லி: சத்​தீஸ்​கரில் 35 ஆண்​டு​களாக வசித்து வந்த வங்​கதேச தம்​ப​தி​யினர், இந்​தி​யாவை விட்டு தப்​பிச் செல்​லும்​போது கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்து பிஎஸ்​எப், வடக்கு வங்​காள எல்​லைப் பகு​திக்​கான செய்​தித் தொடர்​பாளர் ஒரு​வர் கூறிய​தாவது: மேற்கு வங்​கத்​தின் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்​டம் சாக்​கோ​பால் என்ற கிராமத்​துக்கு அரு​கில் வேலி இடப்​ப​டாத சர்​வ​தேச எல்​லையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்ற ஜைனப் என்ற பெண் பிடிபட்​டார். விசா​ரணை​யில் வங்க தேசத்தை சேர்ந்த அவர் தனது கணவர் ஷேக் இம்​ரானுடன் கடந்த 1990-ல் சட்​ட​விரோத​மாக இந்​தி​யா​வுக்​குள் ஊடுரு​வியது தெரிய​வந்​தது.

மேலும் விசா​ரணை​யின் விளை​வாக, ஹில்லி சோதனைச் சாவடி வழி​யாக வங்​கதேசம் சென்ற அவரது கணவர் பிஎஸ்​எப் முன் சரண் அடைவதற்​காக திரும்பி வந்​துள்​ளார். இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக வசிக்​கும் வங்​கதேசத்​தினரை அடை​யாளம் காணும் பணி சத்​தீஸ்​கரில் தீவிரம் அடைந்​துள்​ளது. இதனால் இவர்​கள் தங்​கள் சொந்த நாட்​டுக்கு திரும்ப முடிவு செய்​துள்​ளனர். இவ்​வாறு பிஎஸ்​எப் செய்​தித்தொடர்​பாளர் கூறி​னார்.

மேற்கு வங்க போலீ​ஸாரிடம் ஒப்​படைக்​கப்​பட்ட இந்த தம்​ப​தி​யினர் பின்​னர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் இருந்து ஆதார், பான் அட்​டை, வாக்​காளர் அடை​யாள அட்​டை, வாகன ஆர்​.சி. புத்​தகம், இந்​திய பாஸ்​போர்ட் மற்​றும் மொபைல் போன்​களை போலீஸார் பறி​முதல் செய்​தனர். வங்​கதேசத்​தில் உள்ள தங்​கள் சொந்த ஊருக்கு நிரந்​தர​மாக திரும்​புவதே இந்த தம்​ப​தி​யின் நோக்கம்​ என போலீ​ஸார்​ கூறினர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.