இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் (டிரம்ப் நிர்வாகம்) நிறைய போர்களை நிறுத்தினோம். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றோடொன்று தீவிரமாக மோதிக் கொண்டன. இரண்டு பக்கத்தில் இருந்தும் குண்டுகள் மாறிமாறி பொழிந்தன, அங்கிருந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உண்மையில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நான் நினைக்கிறேன். இவை இரண்டும் தீவிர அணு ஆயுத […]
