அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் முக்கிய நகரமான சின்சினாட்டியை தளமாகக் கொண்ட ஆஸ்ட்ரோனமர் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அந்நிறுவனத்தின் மனிதவள அதிகாரி (HR) உடனான ரகசிய தொடர்பு வெளியானதால் ராஜினாமா செய்தார். ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பெரோன் மற்றும் மனிதவள தலைமை அதிகாரி கிறிஸ்டின் கபோட் இருவரும் பொதுவெளியில் நெருக்கமாக இருந்த வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி உலகம் முழுவதும் பேசுபொருளானது. பாஸ்டன் நகரில் உள்ள ஸ்டேடியத்தில் […]
