மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை 

புதுடெல்லி: ​மும்பை ரயில் குண்​டு​வெடிப்பு வழக்​கி​லிருந்து 12 பேரை விடு​வித்த மும்பை உயர் நீதி​மன்ற தீர்ப்​புக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது. கடந்த 2006-ல் மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​ததில் 189 பேர் உயிரிழந்​தனர்.

இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் 12 பேர் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், 12 பேரை​யும் விடு​தலை செய்து திங்​கள் கிழமை உத்​தர​விட்​டது. இதையடுத்து அனை​வரும் விடு​தலை செய்​யப்​பட்​டனர்.

மும்பை உயர் நீதி​மன்ற தீர்ப்பை எதிர்த்து மகா​ராஷ்டிர அரசு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனு நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ் மற்​றும் என்​. கோடீஸ்​வர் சிங் அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, குற்​ற​வாளி​களை விடு​வித்து மும்பை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதித்​தனர். மேலும் இந்த மனு தொடர்​பாக பதில் அளிக்​கு​மாறு அனைத்து குற்​ற​வாளி​களுக்​கும் நோட்​டீஸ் அனுப்ப உத்​த​ரவிட்​டனர். அதே​நேரம், விடுதலை செய்​யப்​பட்ட குற்​ற​வாளி​களை மீண்​டும் சிறை​யில் அடைக்க வேண்​டும் என எந்​த உத்​தர​வும்​ பிறப்​பிக்​க​வில்​லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.