திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.3 கோடி வீடு, ரூ.66 லட்சம் சேமிப்பு: ஐஆர்எஸ் அதிகாரியின் உயில் ஒப்படைப்பு

திருமலை: ஹைத​ரா​பாத் வனஸ்​தலிபுரத்​தில் வசித்த ஓய்​வு​பெற்ற ஐஆர்​எஸ் அதி​காரி ஒய்​.​வி.எஸ்​.எஸ். பாஸ்​கர் ராவ், ஏழு​மலையானின் தீவிர பக்​தர் ஆவர். அவர் தனது இறப்​புக்கு பிறகு தனது வீடு மற்​றும் வங்கி சேமிப்பை ஏழு​மலை​யானுக்கு வழங்க வேண்​டும் என உயில் எழுதி வைத்​திருந்​தார்.

இந்​நிலை​யில் பாஸ்​கர் ராவ் உடல்​நலக்​குறை​வால் சமீபத்​தில் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது வீட்​டுப் பத்​திரம், வங்​கிக் கணக்கு புத்​தகம் மற்​றும் உயி​லின் நகலை அவரது உறவினர்​கள் நேற்று திரு​மலைக்கு வந்​து, தேவஸ்​தான கூடு​தல் நிர்​வாக அதிகாரி வெங்​கைய்ய சவுத்​ரி​யிடம் ஒப்​படைத்​தனர்.

பாஸ்​கர் ராவின் 3,500 சதுரஅடி வீட்​டின் தற்​போதைய மதிப்பு ரூ.3 கோடி ஆகும். அவர் தனது வங்​கிக் கணக்​கில் ரூ.66 லட்​சம் சேமித்து வைத்​திருந்​தார். வீட்டை ஆன்​மிக நிகழ்ச்​சிகளுக்​கும் சேமிப்பு பணத்தை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் பல்​வேறு அறக்கட்டளைகளுக்​கும் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும் என அவர் உயி​லில் குறிப்​பிட்​டிருந்​தார். உயி​லின்​படி சொத்​துகளை ஒப் படைத்த பாஸ்​கர் ராவின் உறவினர்​களை தேவஸ்​தான கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெகு​வாக பா​ராட்​டி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.