சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் கோட்டைக்கு (தலைமைச் செயலகம்) வருகை தருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்க திடீரென தலைச்சுற்று ஏற்பட்டதால், ஜூலை 21ந்தேதி அன்று காலை சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் கேன்சர் உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் இதயம் தொடர்பான ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டது. இதற்கிடையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் […]
