நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்கு எதி​ராக எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் நேற்று 8-வது நாளாக ஆர்ப்பாட்டத்​தில் ஈடு​பட்​டனர். பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் சிறப்பு திருத்​தம் மேற்​கொண்​டுள்​ளது.

இதற்கு எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. லட்​சக்​கணக்​கான வாக்​காளர்​களின் வாக்குரிமையை பறிப்​பதே இதன் நோக்​கம் என்று அவை குற்​றம்​சாட்டி வரு​கின்​றன.

இந்​நிலை​யில் பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​ததுக்கு எதி​ராக எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் நேற்று 8-வது நாளாக நாடாளுமன்ற வளாகத்​தில் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

நாடாளு​மன்​றத்​தின் மகர் துவார் நுழை​வா​யில் படிக்​கட்​டு​கள் அரு​கில் நடை​பெற்ற இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் காங்​கிரஸ் தலை​வர்​கள் சோனியா காந்​தி, பிரி​யங்கா காந்தி வதே​ரா, சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் மற்​றும் திமுக, திரிண​மூல் காங்​கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடது​சாரி கட்​சிகளின் எம்​.பி.க்​கள் பங்​கேற்று முழக்​கம் எழுப்​பினர்.

இந்த சிறப்பு திருத்​தத்​துக்கு நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் எதிர்க்​கட்​சிகள் தங்​கள் எதிர்ப்பை தெரி​வித்து வரு​கின்​றன. இந்த விவ​காரம் குறித்து அவை​யில் வி​வா​திக்க வேண்​டும்​ என்​று கோரி வரு​கின்​றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.