சென்னை: 26 கோடி மோசடி வழக்கில் ‘மெர்சல்’ தயாரிப்பாளர் ராமசாமிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட உள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ராம நாராயணன் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ராமசாமியே தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஜய்யின் “மெர்சல்” திரைப்படத்தை 2017 ஆம் ஆண்டு தயாரித்திருந்தார். அதனை தொடர்ந்து “வல்லவனுக்கு வல்லவன்”, “Mr Housekeeping” […]
