நெல்லை: சமீபத்தில் அறநிலையத்துறையினரால் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்தில் இருந்த சிமெண்ட் கலசம் உடைந்து விழுந்தது பக்தர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தென்காசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த சிமெண்ட் கலசம் பெயர்ந்து விழுந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் முறையாகப் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாத நிலையில் அவசரம் அவசரமாக இந்து அறநிலையத்துறையினரால் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. வடக்கே காசி தெற்கே தென்காசி […]
