சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு தினமான ஆக.7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி சென்றுக்கொண்டிருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 7வது நினைவுநாளையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில் தி.மு.க. சார்பில் அமைதி பேரணி தொடங்கியது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, […]
