திருவனந்தபுரம்,
கேரளா சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மாநில அரசின் மருத்துவ கல்வித்துறையின் கீழ் ஏராளமான டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பல டாக்டர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 51 டாக்டர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், சட்டவிரோதமாக விடுப்பில் இருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக பல கட்டங்களாக அந்த டாக்டர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கு முறையான பதில் தரவில்லை. மேலும், மருத்துவப்பணிகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும் மாநிலம் முழுவதும் அரசின் மருத்துவக்கல்வி துறையில் பணி செய்து வந்த 51 டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.