டெல்லி: பீகார் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, இதுவரை எந்த அரசியல் கட்சியாலும் ஒரு கோரிக்கை அல்லது ஆட்சேபனை கூட தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் […]
