பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பெங்களூரு: பெங்​களூரு​வில் மெட்ரோ ரயி​லின் மஞ்​சள் பாதையை​யும், 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை​களை​யும் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். இதன் மூலம் ஐடி ஊழியர்​களும் ஓசூர் பயணி​களும் பெரு​மள​வில் பயனடைவார்கள்.

பிரதமர் நரேந்​திர மோடி டெல்​லி​யில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்​களூரு வந்​​தார். அங்​கிருந்து பெங்​களூரு கெம்​பேக​வுடா ரயில் நிலை​யத்​துக்கு சென்ற அவர், பெங்​களூரு-பெல​கா​வி, அமிர்​தசரஸ்​-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்​ரா, அஜ்னி (நாக்​பூர்​)-புனே ஆகிய 3 வழித்​தடங்​களில் புதிய வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​களை கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

இதையடுத்​து, பெங்​களூரு நம்ம மெட்ரோ ரயில் திட்​டத்​தின் கீழ் ரூ.7160 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்​டுள்ள 19.1 கிமீ தொலைவை கொண்ட மஞ்​சள் பாதை​யில் ஓட்​டுநர் இல்​லாத ரயில் சேவையை ராகி​குட்டா மெட்ரோ நிலை​யத்​தில் அவர் தொடங்கி வைத்​தார். பின்​னர் க்யூ ஆர் கோடு அடிப்​படை​யில் செயல்​படக்​கூடிய டிக்​கெட் வழங்​கும் இயந்​திரத்​தில் டிக்​கெட்டை பெற்ற நரேந்​திர மோடி, பெண் லோகோ பைலட் இயக்​கிய மெட்ரோ ரயி​லில் எலக்ட்​ரானிக் சிட்டி வரை பயணம் மேற்​கொண்​டார்.

அப்​போது அவருடன் கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார் உள்​ளிட்​டோரும், பள்ளி குழந்தைகளும், இந்த மெட்ரோ பாதை​யின் கட்​டு​மான பணி​யில் ஈடு​பட்​ட​வர்​களும் பயணித்​தனர். பெங்​களூரு தொழில்​நுட்ப பூங்​கா​வில் ரூ.15,610 கோடி மதிப்​பிலான 3-ம் கட்ட மெட்ரோ பணி​களுக்கு மோடி அடிக்​கல் நாட்​டி​னார்.

இந்த கூட்​டத்​தில் பிரதமர் நரேந்​திர‌ மோடி பேசி​ய​தாவது: வளர்ச்சி அடைந்த புதிய இந்​தி​யா​வின் முக​மாக பெங்​களூரு திகழ்​கிறது. உலக அளவில் தகவல் தொழில்​நுட்ப துறை​யில் பெங்​களூரு முன்​னணி நகர​மாக விளங்​கு​கிறது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கைக்கு பிறகு பெங்​களூரு​வுக்கு முதல் முறை​யாக வந்​துள்​ளேன்.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் வாயி​லாக இந்தியா​வின் புதிய முகத்தை உலகம் பார்த்​தது. பயங்​கர​வாதத்​துக்கு ஆதர​வாக இருந்த பாகிஸ்​தானை சில மணி நேரத்​தில் மண்டி​யிட வைத்​ததை உலகமே கண்டு வியந்​தது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் வெற்​றிக்கு பெங்​களூரு​வின் தொழில்​நுட்ப திறன் முக்​கிய காரணி​யாக இருந்​தது.

அதற்காக பெங்​களூரு​வின் மக்​களுக்கு நன்​றியை​யும் பாராட்​டை​யும் தெரி​வித்​துக்​கொள்​கிறேன். நம்​முடைய நகரங்​கள் அதி நவீன​மாக​வும், மறு சீரமைப்பை கொண்​ட​தாக​வும் இருக்க வேண்​டும். கடந்த 2014-ம் ஆண்​டில் பாஜக ஆட்​சிக்கு வந்​த​போது நம் நாட்​டில் வெறும் 5 நகரங்​களில் மட்​டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்​தது. தற்​போது 24 நகரங்​களில் மெட்ரோ ரயில் சேவை இருக்​கிறது. இவ்​வாறு மோடி தெரி​வித்​தார்.

பெங்​களூரு​வில் ஐடி நிறு​வனங்​கள் அதி​க​மாக இயங்​கிவரும் எலக்ட்​ரானிக்ஸ் சிட்டி பகு​திக்கு மெட்ரோ ரயில் சேவை கிடைத்துள்ள​தால் ஐடி ஊழியர்​கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

இந்த மஞ்​சள் பாதை ரயில் சேவை தமிழக எல்​லைக்குமிக அரு​கில் இருப்​ப​தால் ஓசூரில் இருந்து தின​மும் பெங்​களூரு வந்து செல்​லும் மக்​கள் பெரு​மள​வில் பயனடை​வார்​கள் என தெரிகிறது. இதன் காரண​மாக பெங்​களூரு ஓசூர் தேசிய நெடுஞ்​சாலை​யில்​ போக்​கு​வரத்​து நெரிசல்​ குறை​யும்​ என எதிர்ப்பார்க்கப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.