அங்கேதான் ஹர்திக் போன்ற ஆல் ரவுண்டர் தேவை – இந்தியாவுக்கு நியூ. முன்னாள் வீரர் அட்வைஸ்

வெலிங்டன்,

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.

புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தொடரை சமன் செய்து அசத்தியது. இந்த தொடருக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றதால் இந்திய அணி தோல்வியடையும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் அவர்களின் கணிப்பை எல்லாம் பொய்யாக்கிய இந்திய அணி போராடி தொடரை சமன் செய்தது.

இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லாதது ஒரு குறையாக பார்க்கப்பட்டது. நிதிஷ் ரெட்டி இருந்தாலும் அவர் காயம் காரணமாக 4 மற்றும் 5-வது போட்டிகளில் இருந்து விலகினார். அவர் விளையாடிய 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் தொடக்க விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இந்தியாவின் வெற்றிக்கு ஹர்திக் பாண்ட்யா போன்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் தேவை என்று நியூசிலாந்து முன்னாள் வீரரான கிரெய்க் மெக்மில்லன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ஆசிய நிலைமைகளில், உங்களுக்கு ஜடேஜா, வாஷிங்டன் அல்லது முன்பு இருந்த அஸ்வின் போன்ற சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் தேவை. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில், உங்களுக்கு வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் தேவை. ஹர்திக் பாண்ட்யா போன்று பந்து வீசக்கூடிய மற்றும் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய ஒரு வீரரை இந்தியா இழக்கும் இடம் இதுதான். இங்கிலாந்தைப் பொறுத்தவரை, பென் ஸ்டோக்ஸ் அந்த 2 வேலைகளையும் கச்சிதமாக செய்கிறார்”என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.