Asia Cup 2025: ஆசிய கோப்பை 2025 தொடர் செப். 9ஆம் தேதி தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் ஆசிய கோப்பை போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் இந்த முறை ஆசிய கோப்பையும் டி20 வடிவில் நடைபெற இருக்கிறது. கடந்த முறை ஓடிஐ வடிவில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
Asia Cup 2025: ஆசிய கோப்பை பார்மட்
இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகள் ஏ பிரிவிலும்; இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்த அணிகள் தங்கள் பிரிவில் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முதல் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதும். அதில் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப். 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.
Asia Cup 2025: இந்திய அணி ஸ்குவாட் விரைவில் அறிவிப்பு
மொத்தம் 19 போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணி அதன் குரூப் சுற்றில் செப். 10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் அணியுடனும், செப். 14ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், செப். 19ஆம் தேதி ஓமன் அணியுடனும் மோத இருக்கிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 19 அல்லது ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அடுத்த அடுத்த வாரத்தில் ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 ஸ்குவாடை பிசிசிஐ அறிவிக்க இருக்கிறது.
Asia Cup 2025: சூர்யகுமார் வருவாரா?
இந்திய அணியில் ஆசிய கோப்பை ஸ்குவாடில் எந்தெந்த வீரர்கள் பங்கேற்பார்கள் என்ற பேச்சு கடந்த ஒரு வாரக் காலமாக கிளம்பியிருக்கிறது. தற்போதைய கேப்டன் சூர்யகுமார் இன்னும் உடற்தகுதியை நிரூபிக்காத நிலையில் அவருக்கு ஒரு வாரம் காலக்கெடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Asia Cup 2025: உள்ளே வரும் கில்
அதேநேரத்தில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மான் கில்லுக்கு ஆசிய கோப்பை ஸ்குவாடில் இடம் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ஸ்குவாடில் இருக்கும்பட்சத்தில் நிச்சயம் பிளேயிங் லெவனிலும் இடம்பெறுவார். அப்படியிருக்க, அவர் இப்போது டி20 அரங்கில் ஓப்பனிங்கில்தான் விளையாடி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ஓப்பனிங்கில் விளையாடி வந்த அவர், கேகேஆர் அணியில் இருந்தபோது மட்டுமே மிடில் ஆர்டரில் விளையாடி வந்தார்.
Asia Cup 2025: சஞ்சு சாம்சனுக்கு தான் ஆப்பு?
இந்நிலையில், தற்போது சஞ்சு சாம்சன் (வலது கை பேட்டர்) – அபிஷேக் சர்மா (இடது கை பேட்டர்) என இந்திய அணியின் ஓப்பனிங் செட்டாகிவிட்டது. சஞ்சு சாம்சனும் ஆசிய கோப்பைக்கு தனது பயிற்சியை தொடங்கிவிட்டார். இதனால் அவர் அணியில் இடம்பெறுவதும் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. அபிஷேக் சர்மாவையும் கழட்டிவிடுவது சாதாரணமல்ல. இந்த சூழலில், சுப்மான் கில் அணிக்குள் வந்தால் சஞ்சு சாம்சனுக்கு அதிக பிரச்னை எனலாம். ஏனென்றால் அபிஷேக் சர்மா இடது கை பேட்டர் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை.
Asia Cup 2025: நம்பர் 3இல் இவருக்கு வாய்ப்பா?
ஒருவேளை சுப்மான் கில் அணிக்குள் வந்தால் சஞ்சு சாம்சனுக்கு எங்கு இடம் கிடைக்கும்? என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. சஞ்சு சாம்சனை கௌதம் கம்பீர் பெரும் நம்பிக்கையுடன் ஓப்பனிங்கில் இறக்கி, அதில் வெற்றியும் கண்டிருப்பதால் அவரை கீழே இறக்குவாரா என்பதே பெரிய கேள்விதான். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் நம்பர் 3, 4இல் விளையாடுவது உறுதி. அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா என பலமான பேட்டர்கள் வரிசைக் கட்டி நிற்கின்றனர்.
இதனால், ஒருவேளை சஞ்சு சாம்சன் மற்றும் கில் இருவரையும் பிளேயிங் லெவனில் வைக்க வேண்டும் என்றால் நிச்சயம் யாராவது ஒருவரை நம்பர் 3இல் விளையாட வைக்க வேண்டும். அதற்கு பிறகு விளையாட வைக்க முடியாது. இதுவே சூர்யகுமாருக்கும், திலக் வர்மாவுக்கு இடைஞ்சல்தான் என்றாலும் வேறு வழியில்லை.
மேலும் படிக்க | ஆசிய கோப்பையை தவறவிடும் இந்த 8 ஸ்டார் இந்திய வீரர்கள் – யார் யார் பாருங்க!
மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2025: இந்த 3 வீரர்கள் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு!
மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2025: இந்த வீரர் விளையாட சிக்கல்… வெயிட்டிங்கில் சூர்யகுமார்