Mahindra BE 6 Batman Edition – மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிசன் ரூ.27.79 லட்சத்தில் வெளியானது

300 யூனிட்டுகள் மட்டும் தயாரிக்கப்பட உள்ள மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிசன் ஆனது Pack Three வேரியண்டின் அடிப்படையிலான வசதிகளுடன் பேட்மேன் கதாநாயகனால் ஈர்க்கப்பட்ட வசதிகளுடன் ₹27.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட்டு சர்வதேச பேட்மேன் தினமான செப்டம்பர் 20 ஆம் தேதி டெலிவரி வழங்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சார்ஜர் மற்றும் பொருத்துவதற்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். 7.2 kW சார்ஜருக்கு ₹50,000 கூடுதலாகவும் அல்லது 11.2 kW சார்ஜருக்கு ₹75,000 வசூலிக்கப்படும்.

BE6 Batman Edition மாற்றங்கள் என்ன

பேட்மேன் எடிசனில் சாடின் பிளாக் என்ற பிரத்தியேக நிறத்துடன் கதவுகளில் தனிப்பயன் பேட்மேன் ஸ்டிக்கரிங், R20 அலாய் வீல், தங்க நிறத்தை பூசிய சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் காலிப்பர் கொண்டதாகவும், “BE 6 × The Dark Knight” பேட்ஜிங் உள்ளது.

இன்டீரியரில் பல்வேறு இடங்களில் தங்க நிறம் பூசப்பட்ட பேனல்கள், இன்ஷர்டன்களுடன் பேட்மேன் நெம்பர் பிளே 001-300 வரை கொடுக்கப்பபட்டு, பேட்மேன் லோகோ பல்வேறு இடங்களில் உள்ளது.

BE 6 Pack Three வேரியண்டின் அடிப்படையிலான பேட்டரியை பகிர்ந்து கொள்ள உள்ளது.  79Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள பிஇ 6 வேரியண்ட் பவர்  286hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 656 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது.


mahindra be6 batman edition suv
Mahindra BE 6 Batman EditionMahindra BE 6 Batman Edition

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.