2025 Yamaha Fascino S 125 – ரூ.83,498 விலையில் 2025 யமஹா ஃபேசினோ 125 அறிமுகம்

புதிய 2025 யமஹா ஃபேசினோ 125 மைல்டு ஹைபிரிடில் டிஎஃப்டி கிளஸ்ட்டர் உட்பட புதிய மேட் கிரே நிறத்துடன் மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.83,498 முதல் ரூ.1,04,410 வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது.

தொடர்ந்து E20 ஆதரவினை கொண்டு ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் உதவியுடன் பேட்டரி பெற்றுள்ளதால் கூடுதலாக பவர் தேவை அல்லது அதிக சுமை எடுத்துச் செல்லும் சமயங்களில் பேட்டரியில் இருந்து  பவர் அசிஸ்ட் வசதி, சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் உள்ளதால் அதிகப்படியான மைலேஜ் வெளிப்படுத்தும் 125cc எஞ்சின் அதிகபட்சமாக 6500rpm-ல் 8.2ps பவர் மற்றும் 10.3Nm டார்க் 5000rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

2025ல் முக்கிய மாற்றமாக புதிதாக வந்துள்ள Fascino S என்ற டாப் வேரியண்டில் மேட் கிரே நிறத்தை பெற்று கலர் TFT கிளஸ்ட்டருடன் யமஹா Y-Connect ஆப் செயல்பாடு உடன் கூகுள் மேப் ஆதரவுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் பல்வேறு நிகழ் நேர போக்குவரத்து அம்சங்களை பெற முடியும்.

2025 Yamaha Fascino s 125 tft cluster

மற்றபடி, டிஸ்க் வேரியண்டில் மெட்டாலிக் லைட் க்ரீன் மற்றும் டிரம் வேரியண்டில் மெட்டாலிக் வெள்ளை என இரு புதிய நிறங்களும் மற்ற நிறங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றது.

டிரம் அல்லது டிஸ்க் என முன்பக்க பிரேக் வசதியுடன் பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்று டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் பின்புறத்தில் ஒற்றை யூனிட் ஸ்விங் சஸ்பென்ஷன் பெற்றுள்ளது.

  • Fascino 125 Fi Hybrid Drum Black – ரூ.83,498
  • Fascino 125 Fi Hybrid Drum – ரூ.85,550-ரூ.86,550
  • Fascino 125 Fi Hybrid Disc – ரூ.95,620
  • Fascino S 125 Fi Hybrid (Colour TFT/ TBT)-  1,04,410

21 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட் ஸ்பேஸ், எல்இடி விளக்குகள் மற்றும் பல்வேறு நிறங்களை பெற்றதாக கிடைக்கின்றது.

2025 Yamaha Fascino 125 fi metallic white

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.