சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணை தடை கோரி அமைச்சர் பெரியசாமி மேல்முறையீடு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புதுடெல்லி: சொத்​துக் குவிப்பு வழக்கு மறு​வி​சா​ரணைக்​குத் தடை கோரி அமைச்​சர் ஐ. பெரிய​சாமி தாக்​கல் செய்​துள்ள மேல்​முறை​யீடு மனுவை உச்ச நீதி​மன்​றம் இன்று விசா​ரிக்​கிறது.

தமிழக அமைச்​சர் ஐ. பெரிய​சாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்​தில் 2006-2010 வரையி​லான கால​கட்​டத்​தில் வரு​வாய், சட்​டம், சிறை மற்​றும் வீட்டு வசதித்​துறை அமைச்​ச​ராகப் பதவி வகித்​தார்.

அப்போது வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ. 2 கோடியே 1 லட்​சத்து 35 ஆயிரம் அளவுக்​கு சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக அவர், அவரது மனைவி சுசீலா, மகனும் தற்​போதைய பழநி தொகுதி எம்எல்​ஏ-வு​மான செந்​தில்​கு​மார், மற்​றொரு மகன் பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்​குப்​ ப​திவு செய்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்த திண்​டுக்​கல் மாவட்ட ஊழல் தடுப்​புச் சிறப்பு நீதி​மன்​றம், வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட 4 பேரை​யும் விடு​வித்து உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்து திண்​டுக்​கல் மாவட்ட லஞ்ச ஒழிப்​புத்​துறை சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

உயர் நீதிமன்றம் உத்தரவு: இந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் விசாரித்தது. வரு​மானத்​துக்கு அதி​க​மாகச் சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக அமைச்​சர் ஐ.பெரிய​சாமி, அவரது மனைவி சுசீலா, மகன்​கள் செந்​தில்​கு​மார், பிரபு ஆகியோரை விடு​வித்​துத் திண்​டுக்​கல் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்​தது.

மேலும், இந்த வழக்​கில் மீண்​டும் குற்​றச்​சாட்​டு​களைப் பதிவு செய்து தினந்​தோறும் விசா​ரணை நடத்தி வழக்கை 6 மாதத்​தில் முடிக்க வேண்​டும் என திண்​டுக்​கல் மாவட்ட எம்​.பி. எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி மன்​றத்​துக்கு உத்​தர​விட்​டது. இந்த உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதிக்​கக் கோரி அமைச்​சர் பெரிய​சாமி சார்​பில் வழக்​கறிஞர் மாளவிகா ஜெயந்த் தாக்​கல் செய்​துள்ள மேல்​முறை​யீடு மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, அகஸ்​டின் ஜார்ஜ் மாசி அமர்வு இன்று விசாரிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.