Asia Cup 2025: பாபர் அசாமை எடுக்காதது ஏன்? காரணத்தை போட்டுடைத்த பயிற்சியாளர்!

Why Babar Azam not selected: 2025 ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்க்காக ஆசிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் தயாராகி வருகிறது. இந்த சூழலில் முதல் அணியாக ஆசிய கோப்பைக்கான அணியை நேற்று (ஆக. 17) பாகிஸ்தான் அறிவித்தது. இந்த அணிக்கு சல்மான் அலி ஆகாவை கேப்டனாக நியமித்துள்ளனர். ஃபக்கர் சமான், ஷாகின் அஃப்ரிடி உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் நட்சத்திர வீரர் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் சேர்க்கப்படவில்லை. இது அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பாபர் அசாம் ஏன் ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணம் மற்றும் அவர் மீண்டும் அணிக்குள் வர என்ன செய்ய வேண்டும் என்பதையும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான மைக் ஹேசன் அறிவுரை ஒன்றை வழங்கி இருக்கிறார். 

இது தொடர்பாக பேசிய அவர், பாபர் அசாம் சிறந்த வீரர் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் பேட்டிங்கில் சில விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் தடுமாறுகிறார். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் அவர் கடுமையாக பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அதன்படி, அவரும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

பாபர் அசாம் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் பெற வேண்டும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் முன்னேற்றம் அடையலாம் என நினைக்கிறேன். பாகிஸ்தான் அணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கே இடம் கிடைத்து இருக்கிறது. உதாரணத்திற்கு ஃபர்கான் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் மூன்றில் ஆட்டநாயகன் விருதைஅ பெற்றார். டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற ரன் ரேட் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என அவர் கூறினார்.  

செப்டம்பர் 9ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்கும் நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியை செப்டம்பர் 12ஆம் தேதி விளையாடுகிறது. முதல் போட்டியாக ஓமனுடனும் இரண்டாவது போட்டியாக செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியாவுடனும் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்ஸான், சஹீப்ஸாதா, சாஹிப்ஸீம் அப்ரிடி மற்றும் சுஃப்யான் மொகிம்.

 

 

 

About the Author

R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.