பிஹார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்கள் வெளியீடு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பாட்னா: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர், விவரங்​களை தேர்​தல் ஆணை​யம் வெளியிட்டுள்​ளது.

பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​த பணி மேற்​கொள்​ளப்​பட்டுகடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 7.24 கோடி பேரின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன. 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டுள்​ளன. அவர்​களில் 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்தவர்கள், 36 லட்​சம் பேர் நிரந்​தர​மாக இடம்​பெயர்ந்துவிட்​டனர். இதனால் அவர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்டுள்ளன என்று தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்​தது.

இதற்கிடையே, பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டது. சில நாட்​களுக்கு முன்புஇந்த வழக்கை விசா​ரித்த 3 நீதிபதி​கள் அமர்வு, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்சம் பேரின் பெயர்விவரங்​களை வெளி​யிட வேண்​டும் என்று உத்​தர​விட்​டது.

இதை தொடர்ந்து, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர், விவரங்​களை தேர்​தல் ஆணை​யம் நேற்று முன்​தினம் இணை​யத்​தில் வெளி​யிட்​டது.இதுகுறித்து பிஹார் தலைமை தேர்​தல் அதி​காரி வினோத் சிங் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறிய​தாவது: உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்ட 56 மணிநேரத்​தில், 65 லட்​சம் பேரின் விவரங்​களை தேர்​தல் ஆணைய இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்துள்ளோம். தொகு​தி ​வாரி​யாக, வாக்​குச்​சாவடி வாரி​யாக பெயர், விவரங்​கள் வெளி​யிடப்​பட்டுள்​ளன. எதற்​காக பெயர் நீக்​கப்​பட்​டது என்​ப​தற்​கான காரண​மும் தெரிவிக்​கப்​பட்டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்டுள்​ளது.

இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதா தள தலை​வர்​கள் கூறும்​போது, “பிஹார் முழு​வதும் வாக்​காளர்​களிடம் இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் விழிப்​புணர்வை ஏற்​படுத்தி வரு​கின்​றனர். எதிர்க்​கட்​சிகளின் அழுத்​தம் காரண​மாக 65 லட்​சம் பேரின் பெயர், விவரங்​கள் வெளி​யிடப்​பட்டுள்​ளன​” என்றனர்​.

தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியபோது, ‘‘வாக்காளர் வரைவு பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஆகஸ்ட் 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 1 வரை திருத்தம் கோரி விண்ணப்பங்களை அளிக்கலாம். இதன் மீதான பரிசீலனை செப்டம்பர் 25-ம் தேதிக்குள் நிறைவடையும். செப்டம்பர் 30-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. செப்டம்பர் 25-ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.