சென்னை; தமிழ்நாட்டு மக்களின் உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அடுத்துஅங்கு கல்லீரல் திருட்டும் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுகவினருக்கு சொந்தமான இரு மருத்துவமனைகள் சம்பந்தப்பட்டுள்ளது அம்பலமான நிலையில், அந்த மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த […]
