வருகிற செப்டம்பர் 9 முதல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 20 ஓவர் தொடரில் இந்திய அணியை சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும் சுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர்.
முக்கிய மாற்றங்கள்
இந்த அணியில் முன்னாள் முக்கிய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை. ஜெய்ஸ்வால் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். குறிப்பாக, 2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் கோப்பையில் கேப்டனாக ஜொலித்த ஸ்ரேயாஸ், கடந்த ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தும், பஞ்சாபுக்கு 11 ஆண்டுக்கு பிறகு இறுதிப் போட்டியை பெற்றுக் கொடுத்தார். இத்தகைய திறமை வாய்ந்த வீரர் நீக்கியது எதிர்பாராததுதான். ஜெய்ஸ்வால் விளையாடும் டெஸ்ட் தொடரிலும் அதிரடி பாணியுடன் களமிறங்கியுள்ளார். ஆனால் 2025 ஆசியக் கோப்பை அணியில் இருவரும் தவிர்க்கப்பட்டு, இங்கிலாந்து தொடரில் பாராட்டபட்ட கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்தது தேர்வுக்குழுவின் முக்கிய முடிவாக உள்ளது.
சூரியகுமார் யாதவின் விளக்கம்
“என்னுடைய கருத்துபடி சுப்மன் கில் திடீரென துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை. 2024ஆம் ஆண்டில் இலங்கைக்கு சென்ற போது நான் கேப்டனாக இருந்தபோது அவர் துணை கேப்டனாக இருந்தார். அப்போது டி20 உலகக்கோப்பைக்கான புதிய திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். பிறகு அவர் டெஸ்ட் தொடரில் பிஸியாக மாறினார்” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “டி20 போட்டிகளில் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும், டெஸ்ட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்காற்றினார். தற்போது டி20 தொடரில் அவரை அணியில் வைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த தொடரும் 2024 டி20 உலகக் கோப்பை போல பெரிய போட்டியாக இருக்கும்.”
சிக்கல்கள் மற்றும் எதிர்பார்ப்புகள்
ஜெயஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் நீக்கப்பட்டதால் அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்து விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது. ஆனாலும், தேர்வுக்குழுவின் திட்டப்படி, இயக்குநர் மற்றும் பயிற்சியாளர்கள் அணியின் நீண்டகால வெற்றிக்காக மாற்று வீரர்களை முன்னிலைப்படுத்தி உள்ளனர்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ரானா, ரிங்கு சிங். ரிசர்வ் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாசிங்டன் சுந்தர், துருவ் ஜுரேல், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
About the Author
R Balaji