சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை 4வதுமுறையாக மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்ட வருகிறது. தற்போது, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 90,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
