‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம் வென்றார் மணிகா

ஜெய்ப்​பூர்: ‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்தை மணிகா விஸ்​வகர்மா வென்​றுள்​ளார். வரும் நவம்​பரில் தாய்​லாந்​தில் நடை​பெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் சர்​வ​தேச அழகி போட்​டி​யில் இந்​தி​யா​வில் சார்​பில் அவர் பங்​கேற்க உள்​ளார். கடந்த 1926-ம் ஆண்டு முதல் சர்​வ​தேச அளவில் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ அழகி போட்டி நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இரண்​டாம் உலகப்​போரின்​போது இந்த போட்டி நிறுத்​தப்​பட்​டது. பின்​னர் கடந்த 1952 முதல் மீண்​டும் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ போட்டி நடை​பெற்று வரு​கிறது. இந்த சர்​வ​தேச அழகி போட்​டி​யில் பங்​கேற்க அந்​தந்த நாடு​களில் ஒவ்​வொரு ஆண்​டும் அழகி போட்டி நடத்தப்படுகிறது.

இதன்​படி ‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்​துக்​கான போட்டி ராஜஸ்​தான் தலைநகர் ஜெய்ப்​பூரில் நடை​பெற்று வந்​தது. இதில் பல்வேறு மாநிலங்​களை சேர்ந்த 48 பேர் பங்​கேற்​றனர். தமிழகத்​தில் சார்​பில் காமாக் ஷி ஆத்​ரேயா பங்​கேற்​றார். பல்​வேறு சுற்றுகளுக்​குப் பிறகு இறு​திச் சுற்​றுக்கு 11 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

ஜெய்ப்​பூரில் நேற்று முன்​தினம் இரவு இறு​திச் சுற்று போட்டி நடை​பெற்​றது. இதில் ராஜஸ்​தானை சேர்ந்த மணிகா விஸ்​வகர்​மா, ‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்தை வென்​றார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த தான்யா சர்​மா, ஹரி​யா​னாவை சேர்ந்த மெஹக் திங்ரா ஆகியோர் 2, 3-வது இடங்​களைப் பிடித்​தனர். வரும் நவம்​பரில் தாய்​லாந்​தின் நந்​த​புரி​யில் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ போட்டி நடை​பெற உள்​ளது. இதில் இந்​தி​யா​வின் சார்​பில் மணிகா விஸ்​வகர்மா பங்​கேற்க உள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.