இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவருக்கு சமீப காலமாக இந்திய அணி வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவரை பார்க்க முடிகிறது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீச்சக்கூடிய அவருக்கு ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. யுஸ்வேந்திர சாஹல், தொழில் ரீதியாக பின்னடைவை சந்தித்தது மட்டுமல்லாமல் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து
அதாவது, பிரபல நடன கலைஞரான தனஸ்ரீ வர்மாவை கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்திக்கொண்டார் யுஸ்வேந்திர சாஹல். இதையடுத்து நல்ல ஜோடியாக திகழ்ந்து வந்த இவர்கள், திடீரென விவகாரத்து செய்துக்கொண்டனர். சாஹல் தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கினார். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு, யுஸ்வேந்திர சாஹல் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மனம் திறந்த தனஸ்ரீ வர்மா
இந்த நிலையில், இதுவரை விவாகரத்து குறித்து வாய்யை திறக்கமால் இருந்த தனஸ்ரீ வர்மா, முதல் முறையாக மெளனம் கலைத்துள்ளார். அவர் ஒரு இந்தி ஊடகத்தில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் போலித் திருமணம் குறித்து வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் பேசிய அவர், தனிப்பட்ட வாழ்க்கை என்று நாம் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒரு கை ஓசை தராது. நான் ஒரு விஷயத்தை பற்றி எதுவும் பேசவில்லை என்பதற்காக பலரும் அவர்களுக்கு தெரியாத விஷயம் குறித்து பேசுவது சரியல்ல.
முற்றிலும் உடைந்து போனேன்
சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் எனக்கு மட்டுமல்ல, யாருக்குமே நடக்கக்கூடாது. வாழ்க்கையில் ஒரு விஷயத்தில் இருந்து வெளியே வந்து பெரிய விஷயங்களை சாதிக்க நினைத்தால், அதை மீண்டும் பேசத் தேவையில்லை. என் பக்கம் நியாயம் இருக்கிறது. மேலும், விவாகரத்து என்பது கொண்டாட வேண்டிய ஒன்றல்ல. அதே சமயம் இது இரண்டு நபர்களை பற்றியது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட குடும்பகளை பற்றியது. திருமண வாழ்க்கை அன்புடன் தொடங்குகிறது.
ஆனால் அது முடியும்போது, பெரும்பாலும் அவநம்பிக்கையை தருகிறது. நாங்கள் மனதளவில் விவாகரத்திற்கு தயாராக இருந்தாலும், தீர்ப்பு வழங்கப்பட்டபோது, நான் முற்றிலும் உடைந்து போனேன். நான் எல்லோர் முன்னிலையிலும் அழ ஆரம்பித்தேன். அந்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
மேலும் படிங்க: ஆசிய கோப்பை: துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டது ஏன்? சூர்யகுமார் யாதவ் விளக்கம்!
About the Author
R Balaji