துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மண்டலம் V (ராயபுரம்) மற்றும் VI (திரு. வி. கா. நகர்) ஆகியவற்றில் துப்புரவுப் பணிகளை தனியார்வசம் ஒப்படைக்க கடந்த ஜூன் 16ம் தேதி சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. மாநகராட்சியின் இந்த முடிவை எதிர்த்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி […]
