சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழக ஆளுநர், ஆட்சியாளர்கள் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தின தேநீர் விருந்தையும் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். வரும் ஆக.23-ம் தேதி வரை டெல்லியில் இருக்கும் அவர், அங்கிருந்து அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை வரும் வகையில் பயணத்திட்டம் உள்ளது.
ஆளுதருடன், அவரது செயலர், பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர். ஆளுநரின் பயணம் திட்டமிட்டது என்றும், டெல்லியில் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டாலும், ஆளுநர் அடுத்தடுத்த நாட்களில் மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்து பேசவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் அவர் பேச இருப்பதாகவும் தெரிகிறது.