பிரதமர், முதல்வர்களை நீக்கம் செய்யும் மசோதா ஒரு  திசை திருப்பும் செயல்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர், மாநில முதல்​வர்​கள், அமைச்​சர்​கள் வழக்​கில் சிக்கி 30 நாட்​கள் சிறை​யில் இருந்​தால் அவர்களை நீக்​கம் செய்​வதற்​கான சட்​டமசோதா நேற்று நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோதாவை,மக்கள் பிரச்சினையை திசை திருப்ப தாக்கல் செய்துள்ளார்கள். மக்களுடைய கவனத்தை மட்டும் திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக செய்துள்ளார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்களை வெளியிட்டு ஆற்றிய உரையில் முதல்வர் இவ்வாறாக தெரிவித்தார்.

முதல்வர் பேசியதாவது: நேற்று நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் உள்துறை அமைச்சர்.

இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள். அப்போதெல்லாம் இந்த சட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி கடுமையாக எதிர்ததோ, அதேபோல இந்த கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்.

இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள். மக்கள் பிரச்சனையை திசை திருப்ப செய்கிறார்கள். மக்களுடைய கவனத்தை மட்டும் திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக அதை செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று மசோதா தாக்கலானவுடனேயே முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கண்​டனம் தெரி​வித்​தார். அதில், “இந்த, 130-வது அரசி​யல் சட்​டத்​திருத்​தம் என்​பது சீர்​திருத்​தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்​சட்​டம். 30 நாள் கைது என்​றால், மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட முதல்​வரை எந்த விசா​ரணை​யும், நீதி​மன்​றத் தண்டிப்​பும் இல்​லாமலேயே பதவி நீக்​கம் செய்​ய​லாம். பாஜக வைத்​தது​தான் சட்​டம்..

பிரதமருக்​குக் கீழான சர்​வா​தி​கார நாடாக இந்​தி​யாவை மாற்​று​வதன் மூலம் மத்​திய பாஜக அரசு அரசி​யலமைப்​புச் சட்​டத்​தை​யும் அதன் மக்​களாட்சி அடித்​தளத்​தை​யும் களங்​கப்​படுத்த முடி​வெடுத்​து​விட்​டது.” என்று கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.