AI Latest News: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறார்கள். ஸ்மார்ட்போனின் உதவியுடன், வீட்டிலிருந்தபடியே பலரிடம் பேசுவது, வீடியோ கால் செய்வது, மெசேஜ் அனுப்புவது, முக்கியமான அலுவலக வேலைகளை முடிப்பது என பல பணிகளை செய்ய முடிகின்றது. இந்த அனைத்துப் பணிகளிலும் வாட்ஸ்அப் முக்கிய பங்கு வகிக்கிறது.
AI வருகைக்குப் பிறகு, இந்தப் பணிகள் இன்னும் எளிதாகிவிட்டன. ஆனால் வேலை எவ்வளவு எளிதாகிவிட்டதோ, அவ்வளவு ஆபத்தும் அதிகரித்துள்ளது. சமீபத்தில், AI வாட்ஸ்அப் குழு சேட்களையும் படிக்க முடியும் என்ற ஒரு ஆச்சரியமான விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகையால் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிவிட்டது.
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா இந்தக் கூற்றை முன்வைத்துள்ளார். வாட்ஸ்அப்பின் AI ஆல் இப்போது குழு சேட்களையும் படிக்க முடியும் என அவர் கூறியுள்ளார். ஆனால் இதைத் தவிர்க்க ஒரு வழி இருக்கிறது. சில செட்டிங்குகளை மாற்றினால் போதும், இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சமூக ஊடக தளமான எக்ஸில் அதைத் தடுக்க செட்டிங்சை மாற்றுவதற்கான வழியையும் கூறியுள்ளார். Advanced Chat Privacy -ஐ ஆன் செய்யுமாறு அறிவுறுத்திய பதிவில் ஒரு ஸ்கிரீன்ஷாட்டும் பகிரப்பட்டுள்ளது. இந்த அம்சம் டீஃபால்டாக ‘ஆஃப்’ ஆக இருக்கும். ஆனால் நீங்கள் விரும்பினால், இந்த அம்சத்தை நீங்கள் எளிதாக ‘ஆன்’ செய்யலாம். இதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் வாட்ஸ்அப் அதன் புதிய புதுப்பிப்பில் பல அம்சங்களை அறிமுகப்படுத்தியது. இதில், செயற்கை நுண்ணறிவு அதாவது AI கருவி உங்கள் சேட்டை அணுக அனுமதிக்கப்படலாம். இந்த விஷயத்தில், மெட்டா AI இன் விருப்பம் முற்றிலும் பயனர்களை சார்ந்தது என்று வாட்ஸ்அப் கூறுகிறது. அதாவது நீங்கள் அதை அனுமதித்தால், அது வேலை செய்யும் இல்லையெனில் வேலை செய்யாது. இதற்கான செட்டிங்கை மாற்றினால் மெட்டா AI பயனர்கள் அதனுடன் பகிர்ந்து கொள்வதை மட்டுமே படிக்கும் படி செய்யலாம் என வாட்ஸ்அப் கூறுகிறது.
அனைத்து தனிப்பட்ட சேட்களும் அரட்டைகளும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகின்றன என்று வாட்ஸ்அப் கூறுகிறது. இதன் பொருள் செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் மட்டுமே அந்த சேட்களைப் படிக்க முடியும்.
WhatsApp Advanced Chat Privacy: இந்த வழியில் ஆன் செய்யலாம்
– இதற்கு, முதலில் நீங்கள் உறுப்பினராக உள்ள வாட்ஸ்அப் குழுவைத் திறக்கவும்.
– இதற்குப் பிறகு, குழுவின் பெயரைக் கிளிக் செய்யவும்.
– இப்போது சிறிது ஸ்க்ரோல் செய்யவும்.
– ஸ்க்ரோல் செய்யும்போது, அட்வான்ஸ்ட் சேட் ப்ரைவசி அம்சத்தைக் காண்பீர்கள்.
– இந்த ஃபீசரை டேப் செய்து அதை இயக்கலாம்.
வாட்ஸ்அப் இந்த அற்புதமான அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது
மெட்டா AI ஐப் பயன்படுத்தி படிக்காத நீண்ட சேட்களின் சுருக்கத்தை வழங்கும் செய்தி சுருக்கம் போன்ற அம்சத்தை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. இந்த அம்சத்தின் நோக்கம் பயனர் அனுபவத்தை சிறந்ததாக்குவது என வாட்ஸ்அப் கூறுகிறது. ஆனால் இந்த அம்சத்தில் பயனர் தனியுரிமை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதனுடன், வாட்ஸ்அப் எதிர்காலத்தில் கட்டண சேனல் சந்தாவையும் கொண்டு வரக்கூடும் என கூறப்படுகின்றது.
About the Author
Sripriya Sambathkumar
நாட்டின் மீது பற்று, தமிழின் மீது தாகம், இலக்கியத்தில் ஆர்வம், எழுதுவதில் நாட்டம், புத்தகங்கள் மீது பித்து, புதுமையில் விருப்பம், பழமையுடன் நெருக்கம், இசையின் மீது ஈர்ப்பு, பலவித ரசனைகளின் ரசிகை!!
…Read More