ரஷ்யாவிலிருந்து ஹங்கேரிக்கு செல்லும் பெட்ரோல் குழாய் உக்ரைன் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் பிரையான்சுக் மாகாணத்தில் ட்ருஸ்பா எண்ணெய் குழாய் மீது நடைபெற்ற தாக்குதலில் அந்தக் குழாய் வெடித்து பற்றி எரிந்தது. இதனால் ஹங்கேரிக்கு குழாய் வழியாக எண்ணெய் அனுப்பும் பணி தடைபட்டுள்ளதால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் பீட்டர் சுஜிஜ்ஜார்டோ, இந்த எண்ணெய் குழாய் மீது கடந்த […]
