UPI 3.0 Latest News: பண பரிமாற்றங்களுக்கு அதிக அளவில் UPI-ஐ பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றல இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். UPI -இல் ஒரு அப்கிரேட் ஏற்படவுள்ளது. கூடிய விரைவில் UPI 3.0 அறிமுகம் செய்யப்படும். இதில், UPI ஐ நிர்வகிக்கும் அமைப்பான NPCI பல பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது.
UPI 3.0: இதன் முக்கிய நோக்கம் என்ன?
NPCI செய்துள்ள இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் UPI ஐப் பயன்படுத்துவதில் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதாகும். இந்த மேம்படுத்தலின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், ஸ்மார்ட் டிவி, குளிர்சாதன பெட்டி மற்றும் கார் போன்ற உங்கள் ஸ்மார்ட் சாதனங்களும் இனி உங்களுக்கான UPI கட்டணங்களை செலுத்தும்.
UPI 3.0 இல் பல அதி நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் இருக்கவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் முழுமையாக காணலாம்.
UPI 3.0 இல் வரவுள்ள முக்கிய மாற்றம் என்ன?
– NPCI விரைவில் UPI 3.0 ஐ அறிமுகப்படுத்தக்கூடும் என கூறப்படுகின்றது.
– இந்த மேம்படுத்தலின் மூலம், இனி UPI ஐ IoT அதாவது இண்டர்னெட் ஆஃப் திங்சிலும் பயன்படுத்தலாம்.
– IoT என்பது இணையத்தை அணுகக்கூடிய அன்றாடப் பொருட்களைக் குறிக்கிறது.
– ஸ்மார்ட் வாட்ச், டிவி, கார் அல்லது குளிர்சாதன பெட்டி போன்றவை இதன் முக்கியமான எடுத்துக்காட்டுகள்.
– அதாவது, UPI 3.0 வந்த பிறகு, உங்கள் வீட்டில் உள்ள ஸ்மார்ட் சாதனங்களே உங்களுக்காக கட்டணங்களை செலுத்தும்.
– இந்த வழியில், பணம் செலுத்த உங்கள் தொலைபேசியை மட்டும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
UPI AutoPay மற்றும் UPI Circle அம்சம் கிடைக்கும்
UPI 3.0 உடன், UPI Auto Pay மற்றும் UPI Circle அம்சத்தையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். இவற்றின் மூலம், உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் சாதனங்கள் நீங்கள் அருகில் இல்லாதபோதும் பணம் செலுத்தும் பணியை செய்யும். தேவைப்படும் போதெல்லாம், வீட்டில் இருக்கும் டிவி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம், கார் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் அனைத்தும் ஸ்மார்ட் முறையில் கட்டணத்தை செலுத்தி முடிக்கும். அதாவது விரைவில் UPI வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தலில் அதி நவீன அம்சங்களை அனுபவிக்க முடியும். இது UPI இன் வளர்ச்சியில் ஒரு பெரிய மேம்படுத்தலாக இருக்கும் என தொழில்நுட்ப நிபுணர்கள் கருதுகிறார்கள்.
UPI 3.0 எப்போது தொடங்கும்?
UPI 3.0 தொடக்கம் குறித்து தற்போது எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. எனினும், UPI 3.0 அக்டோபர் மாதத்திற்குள் குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2025 இல் (Global Fintech Fest 2025) அறிவிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
UPI 3.0: முக்கிய அம்சங்கள்
– இந்த மேம்படுத்தலின் மூலம் UPI பயனர்கள் ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வரம்பை நிர்ணயிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
– இப்படிச் செய்வதன் மூலம், எந்த ஸ்மார்ட் சாதனமும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி தானாகவே பணம் செலுத்த முடியாதபடி கட்டுப்படுத்தலாம்.
– இதன் மூலம் பயனர்களுக்கு ஆடோமேடிக் பேமண்டுகளுக்கான வசதி கிடைப்பதுடன் எந்தவொரு ஸ்மார்ட் சாதனமும் தவறுதலாக அதிகப்படியான கட்டணத்தைச் செலுத்தாது என்ற உத்தரவாதமும் கிடைக்கிறது.
– இந்த அம்சத்தின் காரணமாக மக்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தை உடனடியாக ஏற்றுக்கொள்வார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Internet of Things: IoT என்றால் என்ன?
இணையம் அல்லது பிற தொடர்பு நெட்வொர்க்குகள் மூலம் பிற சாதனங்கள் மற்றும் அமைப்புகளுடன் தரவை இணைத்து பரிமாறிக்கொள்ளும் சென்சார்கள், செயலாக்க திறன், மென்பொருள் மற்றும் பிற தொழில்நுட்பங்களைக் கொண்ட சாதனங்களை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) என கூறுகிறோம். இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்பது இணைக்கப்பட்ட ஸ்மார்ட் சாதனங்களின் கூட்டு வலையமைப்பாகும்.
About the Author
Sripriya Sambathkumar