பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை: சென்னையில் முதியோர்களுக்கு உதவி மையம் அமைத்து உதவும் போலீஸ்

சென்னை: உதவி மையம் அமைத்து முதி​யோர்​களுக்கு சென்னை போலீ​ஸார் உதவி வரு​கின்​றனர். இது தொடர்​பாக சென்னை காவல் ஆணை​யர் அருண் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: 60 வயதுக்கு மேற்​பட்ட முதி​யோர்​களுக்கு உதவ 1252 என்ற எண்​ணுடன் சென்னை காவல் துறை​யில் முதி​யோர் உதவி மையம் செயல்​பட்டு வரு​கிறது. 75 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​களுக்கு உதவிக்​கரம் நீட்ட `பந்​தம்’ என்ற சேவை திட்​டம் கடந்த ஆண்டு தொடங்​கப்​பட்​டது.

இந்த திட்​டத்​தின் கீழ் 9499957575 என்ற செல்​போன் எண் மூலம் உதவி கேட்​கும் முதி​ய​வர்​களுக்கு உடனடி உதவி போலீ​ஸார் மூலம் கிடைக்​கிறது. பிள்​ளை​களால் கைவிடப்​பட்ட முதி​யோர்​கள், வெளி​நாடு​களில் பிள்​ளை​கள் வசிப்​ப​தால் தனித்து வாழும் முதியோர்கள், வாரிசு இல்​லாத முதி​யோர்​கள் என தனி​யாக வசிக்​கும் மூத்த குடிமக்​களின் அழைப்​பு​களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் கொடுக்​கப்​படு​கிறது.

அவர்​களுக்​குத் தேவை​யான மருத்​துவ வசதி, பாது​காப்பு ஏற்​பாடு​கள், ஆலோ​சனை​கள், சட்ட உதவி உள்​ளிட்ட நடவடிக்​கைகளை போலீ​ஸார் மேற்​கொண்டு வரு​கின்​றனர். இந்​தாண்டு இது​வரை `பந்​தம்’ உதவி மையம் மூல​மாக 185 அழைப்​பு​களுக்கு சட்​டரீ​தி​யான தீர்​வும், 6 அழைப்​பு​களுக்கு மருத்​துவ உதவி​யும், 5 அழைப்​பு​களுக்கு பாது​காப்பு உதவி​யும், 41 அழைப்​பு​களுக்கு இதர அத்​தி​யா​வசிய உதவி​யும் செய்​யப்​பட்​டுள்​ளது.

954 அழைப்​பு​களுக்கு தகவல், வழி​காட்​டு​தல் உதவி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. மொத்​தம் 1,191 அழைப்​பு​கள் பெறப்​பட்டு 72 மணி நேரத்​துக்​குள் தீர்வு காணப்​பட்​டுள்​ளது. மேலும் சென்னை காவல் துறை​யில் செயல்​பட்டு வரும் காவல் கரங்​கள் உதவி மையம் மூலம் இந்த ஆண்​டில் இது​வரை 646 ஆதர​வற்ற முதி​ய​வர்​கள் மீட்​கப்​பட்டு தகுந்த பாது​காப்பு இல்​லங்​களில் தங்க வைக்​கப்​பட்​டனர். இதில் 117 முதி​ய​வர்​களின் முகவரி​கள் கண்​டறியப்பட்டு, குடும்​பத்​தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.