நமது அரசியலமைப்பு சட்டம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது: சுதர்சன் ரெட்டி கருத்து

புதுடெல்லி: வரும் செப்​. 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் மகா​ராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்​டி​யிடு​கிறார்.

எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​டணி சார்​பில் உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்டி வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்டு உள்​ளார். பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: உயர் நீதி​மன்​றங்​கள், உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பணி​யாற்​றிய​போது அரசி​யலமைப்பு சட்​டத்தை காப்​பாற்ற அர்ப்​பணிப்பு உணர்​வுடன் பணி​யாற்​றினேன் அந்த வேட்கை காரண​மாகவே தற்​போது குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தலில் போட்​டி​யிடு​கிறேன். எனவே இந்த பயணம் எனக்கு புதிது கிடை​யாது.

பொருளா​தார பற்​றாக்​குறை குறித்து பல்​வேறு தரப்​பினரும் விவா​திக்​கின்​றனர். தற்​போது இந்​திய ஜனநாயகத்​தில் இது​போன்ற பிரச்​சினை எழுந்​திருக்​கிறது. நமது நாட்​டின் ஜனநாயகத்​தில் பற்​றாக்​குறை ஏற்​பட்​டிருக்​கிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வரு​கிறது. இதே​போல அரசி​யலமைப்பு சட்​டம், பல்​வேறு சவால்​களை எதிர்​கொண்டு வரு​கிறது. குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்​டி​யிடு​கிறார்.

இண்​டியா கூட்​டணி சார்​பில் நான் போட்​டி​யிடு​கிறேன். உண்​மையை சொல்​வதென்​றால் இந்த தேர்​தல் எங்​கள் இரு​வருக்​கும் இடையி​லான போட்டி கிடை​யாது. இரு சித்​தாந்​தங்​களுக்கு இடையி​லான போட்டி ஆகும்.இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.