சட்டவிரோத சூதாட்ட வழக்கில் கர்நாடக காங். எம்எல்ஏ கைது: ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம் பறிமுதல்

புதுடெல்லி: சட்​ட​விரோத ஆன்​லைன் மற்​றும் ஆஃப்​லைன் சூதாட்ட வழக்​கில் கர்​நாடக காங்​கிரஸ் எம்​எல்ஏ கே.சி.வீரேந்​திரா நேற்று சிக்​கிம் மாநிலத்​தில் கைது செய்​யப்​பட்​டார். இது தொடர்​பான சோதனை​யில் ரூ.12 கோடி ரொக்​கம், ரூ.6 கோடி தங்​கம் உள்​ளிட்​ட​வற்றை அமலாக்​கத் துறை கைப்​பற்​றி​யுள்​ளது.

கர்​நாட மாநிலத்​தின் சித்​ரதுர்கா தொகுதி காங்​கிரஸ் எம்​எல்ஏ வீரேந்​திரா (50). இவர் மற்​றும் இவரது சகோ​தரர் உள்​ளிட்ட குடும்​பத்​தினருக்கு சொந்​த​மான 30 இடங்​களில் அமலாக்​கத் துறை நேற்று முன்​தினம் சோதனை நடத்​தி​யது. பல்​வேறு மாநிலங்​களில் நடை​பெற்ற இந்த சோதனை​யில் வெளி​நாட்டு கரன்சி உட்பட ரூ.12 கோடி ரொக்​கம், ரூ.6 கோடி மதிப்​புடைய தங்க நகைகள, 10 கிலோ வெள்​ளிப் பொருட்​கள் மற்​றும் 4 வாக​னங்​களை அமலாக்​கத் துறை கைப்​பற்​றியது. மேலும் 17 வங்​கிக் கணக்​கு​கள் மற்​றும் 2 வங்கி லாக்​கர்​களை முடக்​கியது.

கோவா​வில் பப்​பீஸ் கேசினா கோல்​டு, ஓஷன் ரிவர்ஸ் கேசினோ, பப்பீஸ் கேசினா பிரைடு, ஓஷன் 7 கேசினோ, பிக் டாடி கேசினோ உள்​ளிட்ட 7 சூதாட்ட மையங்​களில் சோதனை நடை​பெற்​றது. இவை அனைத்​தும் காங்​கிரஸ் எம்​எல்​ஏவுக்கு தொடர்​புடைய​தாகும். இந்​நிலை​யில் சூதாட்ட மையம் ஒன்றை குத்​தகைக்கு எடுப்​ப​தற்​காக நண்​பர்​களு​டன் சிக்​கிம் மாநிலம் சென்​றிருந்த வீரேந்​தி​ராவை சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை வழக்​கில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று காங்​டாக்​கில் கைது செய்​தனர். இதையடுத்து அவரை இன்று பெங்​களூரு நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்த உள்​ளனர்.

இதுகுறித்து அமலாக்​கத் துறை அதி​காரி​கள் கூறுகை​யில், “வீரேந்​தி​ரா​வின் சகோ​தரர் கே.சி.​நாக​ராஜ், அவரது மகன் பிருத்வி என்​.​ராஜ் ஆகியோ​ருக்கு சொந்​த​மான இடங்​களில் இருந்​தும் சொத்து தொடர்​பான பல ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. வீரேந்​தி​ரா​வின் மற்​றொரு சகோ​தரர் கே.சி.​திப்​பே​சாமி உள்​ளிட்ட அவரது கூட்​டாளி​கள் துபா​யில் இருந்து ஆன்​லைன் சூதாட்ட செயல்​பாடு​களை கையாளுகின்​றனர்” என்று தெரி​வித்​தனர். ஆன்​லைன் சூதாட்​டத்​துக்கு தடை விதிக்​கும் மசோதா கடந்த வியாழக்​கிழமை நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டது. இந்த மசோதா குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.